இரவில் சாலை அமைத்தது மாநகராட்சி காலையில் தோண்டியது மின்வாரியம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
02:32

கோடம்பாக்கம்:கோடம்பாக்கத்தில், இரவில் மாநகராட்சி அமைத்த சாலையை, காலையில் மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தது, பகுதிவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேவை துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, மீண்டும் ஒருமுறை அம்பலமாகி உள்ளது.

கோடம்பாக்கம் மண்டலம், 134வது வார்டு, கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள, ஸ்டேசன் வியூ சாலை, சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த வார்டில் சிதில மடைந்துள்ள, எட்டு சாலை களை சீரமைக்க, மாநகராட்சி முடிவு செய்ததது.நேற்று முன்தினம் இரவு, ஸ்டேசன் வியூ சாலையின் ஒரு பகுதியில், தார் சாலை போடப்பட்டது. ஆனால், காலையில் மின்வாரிய அதிகாரிகள், சாலையை துண்டித்து, கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதிதாக போடப்பட்ட சாலையை துண்டித்தது, 24 மணிநேரம் கூட தாக்குபிடிக்க விடாமல், தோண்டியது, பகுதிவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அச்சாலையில், பாதி துாரம் சாலை அமைத்த நிலையில், கேபிள் பதிக்கும் பணி செய்ய வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகள் கேட்டனர். 'இதனால், மீத பணிகள் நிறுத்தப்பட்டு, மின்வாரியம் பணிகளை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. சாலை பணி துவங்கும் முன், கேபிள் பதிக்க, மின்வாரியம் அனுமதி கோரவில்லை. 'தற்போது துண்டிக்கப்பட்ட சாலையில், சீரமைப்பு பணிக்கு, மின்வாரியம் பணம் செலுத்தும்' என்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
10-பிப்-201813:08:46 IST Report Abuse
G.Krishnan சேதப்படுத்திய சாலையை சீரமைக்க மின்வாரியம் பணம் செலுத்தும் . . . . . .யார்வீட்டு பணம் . . . . . மக்கள் செலுத்தும் வரி பணத்துக்கு அதிகாரிகளின் மதிப்பு இதுதான் . . . .
Rate this:
Share this comment
Cancel
Dv Nanru - mumbai,இந்தியா
10-பிப்-201809:15:28 IST Report Abuse
Dv Nanru இதற்க்கு பெயர் தான் மிக மோசமான சிஸ்டம் என்று பெயர் அமைச்சர் ஜெயக்குமார் ...சும்மா வாயில வந்தது எல்லாம் பேசக்கூடாது ஜெயலலிதா இருந்தபோது ஒரு பய வயதொரக்கல் இப்ப கண்டதையும் பேசி மக்கள் கிட்ட மாட்டிக்கிறாங்க...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10-பிப்-201808:37:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தற்போது துண்டிக்கப்பட்ட சாலையில், சீரமைப்பு பணிக்கு, மின்வாரியம் பணம் செலுத்தும்' என்றனர். - எவன் கொடுத்தாலும் வேஸ்ட் வேஸ்ட் தானேடா.. எல்லாம் மக்கள் வரியாக, கட்டணமாக அழுத பணம்டா..
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
10-பிப்-201808:20:50 IST Report Abuse
Rajarajan இது தான் சிஸ்டம் சரி இல்லை. இப்போது புரிந்ததா அமைச்சர்களே ? ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X