தொடரும் விபத்து, உயிரிழப்பை தடுக்க புறவழிச்சாலை பாலத்தில் வேகத்தடை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
03:15

புழல்:புறவழிச்சாலை பாலத்தின் வளைவில், அடிக்கடி நடக்கும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

புழல் ரெட்டேரி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், புறவழிச்சாலை பாலம் உள்ளது.
அம்பத்துார், மதுரவாயல், தாம்பரம் சுற்றுவட்டாரங்களில் இருந்து, மாதவரத்திற்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டுப்பாடற்ற வேகத்தால், பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்குவர்.அப்போது, 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து, பலத்த காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர்கதையானது. ஐந்து ஆண்டுகளில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
அதில், 10க்கும் அதிகமான கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்கள் பலியாகி உள்ளனர்.
அந்த பகுதியில், விபத்து, உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மாதவரம் போக்குவரத்து போலீசார், கடந்தாண்டு அங்கு, அபாய சாலை வளைவு உள்ளதென்று, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், மூன்று இடங்களில் தலா, 100 மீட்டர் இடைவெளியில், இரும்பு, 'டிரம்'களில் மண் நிரப்பி, வேகத்தடை அமைத்தனர்.
மேலும், வாகன ஓட்டிகள், பால தடுப்பில் மோதி உயிரிழந்த குறிப்பிட்ட பகுதியில், இரு கம்பி வலை தடுப்பும் அமைத்தனர். ஆனாலும், விபத்துகள் தொடர்ந்தன. இந்நிலையில், பாலத்தின் வளைவுக்கு முன், 200 அடி இடைவெளியில், நான்கு வேகத்தடைகள் அமைத்துள்ளனர். இதனால், விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.