நெடுஞ்சாலை மின் விளக்குகள் பராமரிப்பில்...மெகா மோசடி! சப்தமின்றி லட்சங்களை சுருட்டும் நிறுவனம் வெளிச்சமின்றி தடுமாறும் வாகன ஓட்டிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
00:45

சென்னை, பல்லாவரத்தில், தேசிய நெடுஞ்சாலையான, ஜி.எஸ்.டி.,யில், மீடியன் விளக்குகள் பராமரிப்பில், பெரிய அளவில் மோசடி நடப்பதாக, சர்ச்சை எழுந்துள்ளது. பராமரிப்பு டெண்டருக்கு மாறாக, ஒப்பந்த நிறுவனம் செயல்படுவதால், குறைந்த வெளிச்சத்தில், வாகன ஓட்டிகள், தடுமாறி செல்லும் அவலமும் ஏற்பட்டு உள்ளது.

சென்னை - திருச்சி, தேசிய நெடுஞ்சாலையான, ஜி.எஸ்.டி.,யில், இரவில், வாகனங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வசதியாக, மீடியனில், மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.

ரூ.25 ஆயிரம்

சாலை நடுவே, 30 மீட்டர் இடைவெளியில், ஒரு கம்பம் நடப்பட்டு, ஒவ்வொரு கம்பத்திலும், இரண்டு மின் விளக்கு, 'பிட்டிங்'குகள், பொருத்தி உள்ளனர். இந்த மின் விளக்குகளை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், பராமரிக்க வேண்டும்.ஜி.எஸ்.டி., சாலையில், வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்; விபத்துகளும் அதிகமாக நடந்து வருகின்றன.இதை கருதி, இரவில், அதிக வெளிச்சம் கிடைக்கும் வகையில், மெட்டல் ஹலைடு வகை, மின் விளக்கு
களை, இச்சாலை மீடியன்களில், பொருத்தி உள்ளனர்.

இந்த மின் விளக்கு, 210 வாட்ஸ் திறன் கொண்ட, 'பிட்டிங்' ஒன்றின் விலை, 25 ஆயிரம் ரூபாய். இந்த மின் விளக்குகளை பொருத்திய நிறுவனம், ஓராண்டிற்கு மட்டுமே, அதை பராமரிக்கும்.
அதன்பின், ஆண்டுதோறும், அந்தந்த உள்ளாட்சிகள் சார்பில், பராமரிப்புக்கு டெண்டர் விட்டு, மின் விளக்குகளை பராமரிக்கின்றன.

பராமரிப்பு செலவாக, 'பிட்டிங்' ஒன்றுக்கு, 5,500 ரூபாய் வரை, அதிகபட்சமாக வழங்கப்படுகிறது.
ஆனால், ஒப்பந்த நிறுவனங்கள், இந்த தொகையில், பாதியை கூட, பராமரிப்பிற்கு செலவு செய்வதில்லை என, புகார் எழுந்துள்ளது.

உதாரணமாக, பல்லாவரம் நகராட்சி எல்லையில் மட்டும், ஜி.எஸ்.டி., சாலை, 2.5 கி.மீ., துாரம் உள்ளது. இதில், அதிகபட்சமாக, 100 மின் விளக்கு கம்பங்களும், 200 மின்விளக்கு, 'பிட்டிங்'களும் உள்ளன.இவற்றில், குறைந்தபட்சம், 50 மின்விளக்குகள் வரை, தற்போது எரிவதில்லை. ஒருசில மின் விளக்குகள் மட்டும், அதிக வெளிச்சத்துடன் எரிகின்றன. பல விளக்குகள், மிகவும் குறைவான வெளிச்சத்தில் எரிகின்றன.

சாலை மட்டத்தில் இருந்து, 15 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மின்விளக்குகள், குறைந்த வெளிச்சத்தை தந்தால், வாகன ஓட்டிகளுக்கு, போதிய வெளிச்சம் கிடைக்காது.இது குறித்து விசாரித்த போது, பல்லாவரம் நகராட்சி பகுதியில், பழுதடையும், 210 வாட்ஸ், மெட்டல் ஹலைடு வகை விளக்குகளுக்கு பதிலாக, 85 வாட்ஸ் திறன் கொண்ட, சாதாரண சி.எப்.எல்., வகை விளக்குகளை பொருத்தி உள்ளது தெரியவந்துள்ளது.


இந்த மின்விளக்கு, 'பிட்டிங்' ஒன்றின் விலை, வெறும், 650 ரூபாய் மட்டுமே. நகராட்சி, ஒப்பந்த நிறுவனத்திற்கு, பராமரிப்பு பணிக்கு வழங்கும் தொகை, 5,500 ரூபாய். ஒப்பந்த நிறுவனம், டெண்டருக்கு மாறாக, மின் விளக்குகளை பராமரிப்பதாக, சர்ச்சை எழுந்துள்ளது.


வாய்ப்பில்லை

இந்த வகையில், பல்லாவரம் நகராட்சி பகுதியில் மட்டும், ஓராண்டிற்கு, நெடுஞ்சாலை மின் விளக்கு பராமரிப்பில் மட்டுமே, பல லட்சம் ரூபாய் சுருட்டப்படுகிறது.வாகன ஓட்டிகள், மின்விளக்கு எரிவதை மட்டுமே கவனிக்கின்றனரே தவிர, தொழில்நுட்ப விபரங்களை, அறிய வாய்ப்பில்லை. அதே நேரத்தில், உயரத்தில் உள்ள மின் விளக்கு களை, டெண்டரில் உள்ளவாறு, சரியான விகிதத்தில் பொருத்தி உள்ளனரா என, பரிசோதிக்கவும் வாய்ப்பில்லை.


இதை பயன்படுத்தி, நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ஒப்பந்த நிறுவனம், மின்விளக்கு பராமரிப்பில், பெரிய அளவில், மோசடியில் ஈடுபடுகிறது என்பதே, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு.இது குறித்து, நகராட்சி நிர்வாக துறை உயர் அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தினால், உண்மை வெளி வரும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.


கேபிள் பழுது, 'ஹை வோல்டேஜ்' காரணமாக, பல விளக்குகள் எரியாமல் உள்ளன. அவற்றை சரிசெய்ய, ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம். ஓரிரு வாரங்களில், அனைத்து விளக்குகளும் எரியும். ஒப்பந்த நிறுவனம், டெண்டர் நிபந்தனையை மீறி, விளக்குகளை மாற்றி பொருத்தியதாக, எந்த புகாரும் இல்லை. இது குறித்து விசாரிக்கப்படும்.

நகராட்சி அதிகாரிகள்

-- நமது நிருபர்- -

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201810:31:19 IST Report Abuse
Srinivasan Kannaiya டெண்டர் நிபந்தனையை மீறி, விளக்குகளை மாற்றி பொருத்தியதாக, எந்த புகாரும் இல்லை. உங்களை மீறி ஒரு பய புகார் அளிப்பானா? தெரிந்தால் அவன் வீட்டிற்கு நாலு பேரை அனுப்பி தர்ம அடி கொடுக்க சொல்லமாட்டாரா... சம்பந்தபட்டவர்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201810:18:32 IST Report Abuse
Srinivasan Kannaiya நாணயமில்லாத அரசியல்வாதிகள் கடந்த அறுபது ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார்கள்.. அவர்களை சரியான முறையில் பொதுமக்கள் அடையாளம் கண்டு தேர்ந்து எடுத்தால்தான் எதற்கும் விடிவு காலம் உண்டு..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201810:17:02 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த மின் விளக்கு, 210 வாட்ஸ் திறன் கொண்ட, 'பிட்டிங்' ஒன்றின் விலை, 25 ஆயிரம் ரூபாய் என்பது மிக அதிகம்.. பராமரிப்பு செலவாக, 'பிட்டிங்' ஒன்றுக்கு, 5,500 ரூபாய் மிக மிக அதிகம்... இது பொதுமக்கள் பணத்தை அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கவே இதுமாதிரி டெண்டர் விட்டு இருக்கிறார்கள்... விளக்கின் ஒளி வெள்ளத்தை அளக்க லக்ஸ் மீட்டர், போட்டோமீட்டர் அல்லது லூமினஸ் இன்டென்சிட்டி மீட்டர் வைத்து அளக்கலாம்... அதை வைத்து ஒப்பந்த விதிகளின் படி சாலைக்கு தேவையான ஒளியை விளக்கு உமிழ்கிறதா என்று பார்க்கலாம்... எல்லாவற்றிக்கும் சேர்த்து அரசியல்வாதிகளின் பையில் பண மழை பொழிந்தால் எல்லா ஒப்பந்தங்களும் காணாமல் போய் விடும்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201803:59:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எந்த புகாரும் இல்லை. இது குறித்து விசாரிக்கப்படும். எஸ்கேப்.. எவ்வளவு சுலபமாக முடிச்சாங்க பாருங்க. இடையே தலையிலே விழுந்தாலும், நமக்கு கேக்கல்லைங்கன்னு சொல்லிட்டு போகும் திருடர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.