பட்டப்படிப்பு முடிக்காதோர் 'சீப் பிளானர்' ஆகலாம்! : சி.எம்.டி.ஏ., மீது பாயும் நகரமைப்பு வல்லுனர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
04:38

எழுத்தர் பணிக்கே,பட்டப்படிப்பு தேவை என கேட்கப்படும் நிலையில், பட்டப்படிப்பே இல்லாத நபர்கள், 'சீப் பிளானர்' பதவிக்கு வரும் வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் விதிகள் தளர்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஒப்புதல்

நகரமைப்புத்துறையில் பட்டயப்படிப்பு முடித்தவர்கள், சி.எம்.டி.ஏ.,வில், திட்ட உதவியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு ஓய்வு கால பயன்கள் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, உதவி திட்ட அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு வழங்குவதுவழக்கம்.

அரசு அங்கீகரித்த பணி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, 'கல்வித்தகுதிகள் அடிப்படையில், அவர்கள், துணை திட்ட அதிகாரி, மூத்த திட்ட அதிகாரி, சீப் பிளானர்' பதவிகளுக்கு வரமுடியாது.

இந்நிலையில், தற்போது காலியாக உள்ள, இரண்டு மூத்த திட்ட அதிகாரி பணியிடங்களுக்கு, தகுதி பெறுவோர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள மூன்று பேரில், இரண்டு நபர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கோப்புகளுக்கு, அண்மையில் நடந்த குழும கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சை

இதில், பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர், நகரமைப்புத்துறையில் பட்டப்படிப்பு முடிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, குழும கூட்டத்திலேயே, நகர், ஊரமைப்புத்துறையான, டி.டி.சி.பி., அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள்கூறியதாவது:

தற்போது, மூத்த திட்ட அதிகாரி பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர், பட்டயப்படிப்பு மட்டும் முடித்து, திட்ட உதவியாளராகவந்தவர்.

பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் என்ற விதியை, தளர்த்தி, ஏற்கனவே, துணை திட்டஅதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மூத்த திட்ட அதிகாரி பதவி வழங்கினால், அடுத்த சில ஆண்டுகளில், சீப் பிளானர் பதவியை எட்டவும் வாய்ப்புள்ளது.

இவரது தற்போதைய பதவி உயர்வை அனுமதிப்பதன் வாயிலாக, பட்டப்படிப்பு முடிக்காதவர்களும், எதிர்காலத்தில், சீப் பிளானர் பதவிக்கு வரலாம் என்ற நிலை உருவாக்கப்படுகிறது.

முன்னுதாரணம்

நகரமைப்பு வல்லுனர் பணிக்கான தரத்தை பாதிப்பதுடன், தவறான முன்னுதாரணத்தை அதிகாரிகள் ஏற்படுத்துகின்றனர்.

கல்வித்தகுதி குறைபாடு, வழக்கு நிலுவையில் உள்ளது ஆகிய விபரங்களை மறைத்து, துணை முதல்வர், வீட்டுவசதி துறை செயலருக்குதவறான தகவல்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்துள்ளனர்.

இந்த, பதவி உயர்வுக்கு அனுமதி அளிப்பதன் வாயிலாக, வீட்டுவசதி துறை செயலர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள்கூறினர்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.