பிரதான பேருந்து நிறுத்தத்தில் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
04:39

தாம்பரம்: தாம்பரம் பேருந்து நிறுத்தம், சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி உள்ளதால், துர்நாற்றம் தாங்க முடியாமல், பயணியர் அவதியுறுகின்றனர்.

தாம்பரம் பேருந்து நிறுத்தத்தின் கிழக்கு பகுதியில், செம்பாக்கம், வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, பேருந்துகள் நின்று செல்கின்றன.

கும்பகோணம், புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற வெளியூர்களுக்கும், அங்கிருந்து பேருந்துகளை பிடிக்க, பயணியர் அதிக அளவில் வருகின்றனர். 'ஆம்னி' பேருந்துகளும், அங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்கின்றன.

தினமும், நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்லும் அந்த பேருந்து நிறுத்தம் முழுவதும், திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது.

இதனால், பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடையில் கீழ் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

பேருந்து நிழற்குடைக்குள் எச்சில் துப்புவது, துாங்குவது, தள்ளுவண்டிகளை நிறுத்துவது, இரவில் சிறுநீர், மலம் கழிப்பது, நாய்கள், மாடுகள் நடமாடுவது போன்ற தொல்லைகளால், பேருந்து நிறுத்தம், சுகாதாரமின்றி, மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.

முக்கிய பேருந்து நிறுத்தமான அங்கு, நவீன நிழற்குடை அமைத்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பயணியர் மத்தியில் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.