பயணியர் உயிரோடு விளையாடும் தெற்கு ரயில்வே : கூடுதல், 'பாஸ்ட்' மின்சார ரயில்கள் இயக்கப்படுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
04:43

செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் பாஸ்ட் ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளதால், படியில் ஆபத்தாக தொங்கியபடி பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பயணியரை காக்க, இந்த வழித்தடத்தில், கூடுதல் பாஸ்ட் ரயில்களை இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஆபத்தான பயணம் : சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, தினசரி, இருவழியிலும், 88 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காலை, மாலை வேளைகளில், 10 நிமிடங்களில் இருந்து, 15 நிமிடங்கள் இடைவெளியில், ரயில்கள் இயக்கப்பட்டும், பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளதால், படியில் தொங்கிக்கொண்டு, பயணியர் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு பின், செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை ரயில்களில், நாள் முழுவதும், கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

நெருக்கடியால், படி, ஜன்னல் பகுதிகளை பிடித்தவாறு, பயணியர்சாகசம் செய்து பயணிக்கின்றனர்.

செங்கல்பட்டில் இருந்து, காலை, 7:00 மணி, 7:25 மணி, 7:50 மணி, 8:00 மணி மற்றும் காலை, 8:05 மணிக்கு, பாஸ்ட் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பல நிலையங்களில் நிற்காமல், விரைவாக செல்லும் என்பதால், காலை நேரங்களில், பணிக்கு செல்வோர், பாஸ்ட் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். இதனால், பாஸ்ட் ரயில்களில், கூட்டம் நிரம்பி வழிகிறது.

திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்திற்கு, காலை, 7:05 மணி, 8:00 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து, காலை, 9:10 மணிக்கும், இயக்கப்படும் பாஸ்ட் மின்சார ரயில்கள், காலை, 8:00 மணி, காலை, 9:00 மணி, காலை, 10:00 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகின்றன.

இந்த ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து, காலை, 8:10 மணி, 9:05 மணி, 10:05 மணிக்கு, கடற்கரைக்கு புறப்படுகின்றன.

'ஹவுஸ்புல்'

இந்த ரயில்கள் திருமால்பூர், காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு வரும்போதே, 'ஹவுஸ்புல்' ஆக வருவதால், செங்கல்பட்டில் இருந்து, பயணியர் படியில், தொங்கியபடி பயணிக்க வேண்டியுள்ளது.

இந்த ரயில்களில், தாம்பரம் வரை, வழியில் உள்ள நிலையங்களில், ஏறுவோர், பயணம் செய்வது சிரமமாக உள்ளது.

இதனால், செங்கல்பட்டில் இருந்து, கடற்கரைக்கு, காலை, 7:00 மணியில் இருந்து, 9:00 மணி வரை மேலும், மூன்று பாஸ்ட் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, மாலை, 6:00 மணியில் இருந்து, இரவு, 9:00 மணி வரை மேலும், மூன்று பாஸ்ட் மின்சார ரயில்களும் இயக்க வேண்டும்.

அப்போது தான், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில்களில் பயணியர் நெருக்கடி குறையும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் விபத்து!


கடந்த, 2017, பிப், 23ல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை பாஸ்ட் ரயிலில், கூட்டம் அதிகம் இருந்ததால், படியில் தொங்கியபடி, பயணம் செய்த பயணியர், பழவந்தாங்கல் அருகே, சிக்னல் கம்பத்தில், மோதியதால், மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஐந்து; பயணியர், படுகாயம் அடைந்தனர்.

தினசரி, பாஸ்ட் ரயில்களில் இருந்து தவறி விழுவோர், பிளாட்பாரத்தில் விழுவோர் என, சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகின்றன.


- நமது நிருபர் -

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-பிப்-201812:23:41 IST Report Abuse
Loganathan Kuttuva மும்பை புறநகர் ரயில்களில் விரைவு வண்டி சேவை பல ஆண்டு காலமாக உள்ளது.இதில் பயணம் செய்ய அதே கட்டணம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.