சிட்டி கிரைம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
01:33

இளம்பெண் தீக்குளிப்பு


செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டையில், குடும்ப பிரச்னையில் இளம்பெண் தீக்குளித்தது குறித்தது, போலீசார் விசாரிக்கின்றர்.

திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டை கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், ஜான்சன் மனைவி மகாலட்சுமி, 30.எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, நித்யஸ்ரீ, 7, மற்றும் ரோகித், 4, என, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தம்பதிக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த மனைவி மகாலட்சுமி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மகாலட்சுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



தம்பதியை மிரட்டியவர் கைது:


திருத்தணி: தம்பதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.

திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன் மனைவி கோகிலா, 35. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி மகன் சதீஷ், 22.நேற்று, கோகிலா வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சதீஷ், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். அப்போது, வீட்டிற்குள் வந்த முருகன், சதீஷை கண்டித்தார். இதையடுத்து சதீஷ், அவரது உறவினர்கள் தாமு, ஜெயம்மாள் ஆகியோர், தம்பதியிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து, கோகிலா கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, சதீஷை கைது செய்தனர். தாமு மற்றும் ஜெயம்மாளை தேடுகின்றனர்.



குடும்ப சண்டையில் விபரீதம்:


செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அருகே, தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

செவ்வாப்பேட்டை அடுத்த, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், சடையன் மகன் மணி, 38. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, ரேவதி என்ற மனைவியும், அனுஸ்ரீ, தாராஸ்ரீ என, இரு குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், 20 நாட்களுக்கு முன், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி ரேவதி, தன் குழந்தைகளுடன், ஓசூரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மனைவி பிரிந்ததால், மன உளைச்சலில் இருந்த மணி, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, அவரது தந்தை சடையன் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.



திருத்தணியில் வீட்டில் திருட்டு:


திருத்தணி: வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த பணம். நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.

திருத்தணி, செந்தமிழ் நகரில் வசிப்பவர், சம்சு அலிபார் மகன் ஷாஜகான், 40.நேற்று முன்தினம், தன் குடும்பத்தினருடன், திருநெல்வேலியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றார்.இந்நிலையில், நேற்று அதிகாலையில், மர்ம நபர்கள், ஷாஜகானின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த, 70 ஆயிரம் ரூபாய், 2 கிராம் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். திருத்தணி போலீசில் ஷாஜகான் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.



மகள் மாயம்: தந்தை புகார்:


வெள்ளவேடு: வெள்ளவேடு அருகே, மாயமான மகளை மீட்டுத் தர வேண்டும் என, தந்தை போலீசில் புகார் அளித்தார்.

வெள்ளவேடு அடுத்த, திருமழிசையைச் சேர்ந்தவர், முனுசாமி மகன் உமாபதி, 47.

இவரது மகள் கோமதி, 21. இப்பகுதியில் உள்ள தனியார் மருந்துக் கடையில் பணி செய்து வரும் கோமதி, 14ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, இவரது தந்தை உமாபதி, நேற்று காலை வெள்ளவேடு போலீசில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



மணல் கடத்தியோர் கைது:


ஆர்.கே.பேட்டை: லாரியில் மணல் கடத்திய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்;

லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆர்.கே.பேட்டை அடுத்த, வீரமங்கலம் பகுதியில் இருந்து, மணல் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசார், அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.அப்போது, வீரமங்கலம் பகுதியில் இருந்து, வேலுார் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட, வேலுார் மாவட்டம், வேலம் பகுதியைச் சேர்ந்த யோகேஷ், சீனிவாசன், ரஞ்சித்குமார் மற்றும் கல்யாணபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X