போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
02:50

வங்கி ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி

நாகமலைபுதுக்கோட்டை: மேலக்குயில்குடி பிரிவு அருகே பாரதஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இங்கு கொள்ளைமுயற்சி நடந்ததாக போலீ சாருக்கு நேற்று அதிகாலை புகார் சென்றது. போலீசார் சென்றுபார்த்த போது கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. அருகே

கற்கள் கிடந்தன. மர்ம நபர்கள் கற்களை வீசிகண்ணாடியை உடைத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதே ஏ.டி.எம்.,ல் சில மாதங்களுக்கு முன் காஸ்

கட்டர் மூலம் கொள்ளை முயற்சி நடந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

------------டூவீலர்கள் திருட்டு: 4 பேர் கைது

செக்கானுாரணி: செக்கானுாரணி இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முருகராஜா மற்றும்போலீசார் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனையில்ஈடுபட்டனர். அப்போது இரு டூவீலர்களில் சென்ற 4 பேர் தப்ப முயன்றனர். பிடித்து விசாரித்த போது கீழஉரப்பனுார்பால்பாண்டி மகன் முருகானந்தம்,19, ரவி மகன் சிவமுத்து,19,செங்குளம் ரமேஷ் மகன்

சுந்தரபாண்டி,18, ராமர் மகன்ராஜ்குமார், 20, என தெரிந்தது. கருமாத்துாரில் இரு டூவீலர்களையும் திருடி வந்ததும் தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

சிறுமி திருமணம் தடுப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கும், வடக்கம்பட்டி பெரியசெல்வம் மகன் குரும்பனுக்கும், 22, திருமணம் நடக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. டி.எஸ்.பி., கல்யாணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமாதேவிமற்றும் போலீசார் சென்று விசாரித்தனர். திருமண ஏற்பாடுகளையும் நிறுத்தி, சிறுமியை மீட்டு மதுரை அரசு காப்பகத்தில்சேர்த்தனர்.

வாலிபர் பலி

திருமங்கலம்: கூடக்கோயில் விவசாயி திருமுருகன், 26. இவர் ெஹல்மெட் அணியாமல் டூ வீலரில் பாறைபத்தி நான்கு வழிச்சாலையில் சென்றார். காரியாபட்டியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் டூ வீலர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்தில் இறந்தார். கூடக்கோயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

குடும்பத் தகராறில் டிரைவர் கொலை

மதுரை: ஒத்தக்கடை மயிலங்குண்டு ேஷர் ஆட்டோ டிரைவர் தசரதன்,37. இவர் மனைவி கவுசல்யா.

கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்தது.

பிப்., 17 இரவு 7:00 மணிக்கு, மனைவியை தசரதன் அடித்துள்ளார். கவுசல்யா தன் தம்பிகள் விளத்துார் பிரபு, தில்லைவாசகனிடம் தெரிவித்தார். ஆத்திரமுற்ற

இருவரும், கட்டையால் தசரதனை தலையில் தாக்கிவிட்டு, தப்பினர். காயமுற்ற அவர் சம்பவ இடத்தில் பலியானார். ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரித்து வருகிறார்.

கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

மதுரை: ஒத்தக்கடை போலீசார் ராஜாக்கூர் அப்பார்ட்மென்ட் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்திருந்த மதுரை சந்தைப்பேட்டை கோவிந்தன், 58, ஓடைப்பட்டி ராஜேஷ் கண்ணன், 21, கல்மேடு மணிகண்டன், 28, ராஜாக்கூர் துரைப்பாண்டி, 37, சிவக்குமார், காளீஸ்வரன், இருளாண்டி, மணிகண்டன், அஜித், அழகர் ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கோவிந்தன், ராஜேஷ் கண்ணன், மணிகண்டன், துரைப்பாண்டியிடம் 150 கிலோவை கைப்பற்றி, கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X