போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
00:02

பெண் துாக்கிட்டு தற்கொலை

மதுராந்தகம், மாவளவாடி, வடக்கு புத்துாரைச் சேர்ந்தவர், ரீத்தா, 26. இவருக்கும், சேலையூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், எட்டு மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 9 சவரன் நகை, வீட்டு உபயோக பொருட்கள், சீதனம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ரீத்தா நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் போலீசார் விசாரித்தனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, ரீத்தாவின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும், உத்தரவிடப்பட்டு உள்ளது.நகை, பணம் திருடியவன் கைது

மாதவரம், பால்பண்ணையைச் சேர்ந்தவர், ஜோசப் ஜான், 50; ஆவின் நிறுவன ஊழியர். இவரது வீட்டில், நேற்று முன்தினம், 10 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயின. மாதவரம் பால்பண்ணை போலீசார், விசாரித்தனர்.

இதில், வேளச்சேரியைச் சேர்ந்த காசி, 19, என்பவனை, நேற்று கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். திருட்டு வழக்கில் சிக்கி, கொசப்பூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த காசி, ஆறு மாதத்திற்கு முன், அங்கிருந்து தப்பி, தலைமறைவாக இருந்தது, விசாரணையில் தெரிய வந்தது.சட்ட கல்லுாரி மாணவனிடம் வழிப்பறி

ஐஸ் ஹவுஸ், ஈஸ்வரன் தாஸ் தெருவைச் சேர்ந்தவர், விஜய், 23; சட்ட கல்லுாரி மாணவன். அவர், நேற்று முன்தினம் இரவு, 10:50 மணியளவில், பாரதி சாலை -- ஈஸ்வரன் தாஸ் சந்திப்பு அருகே நடந்து சென்றார். அங்கிருந்த நான்கு மர்ம நபர்கள், விஜயை சரமாரியாக தாக்கி, மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து தப்பினர். ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.அக்னி குண்டத்தில் தவறி விழுந்தவர் பலி

திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்தவர், கமலக்கண்ணன் மனைவி மல்லிகா, 45. இவர், பிப்., 15ல், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினார்.

அப்போது, கால் இடறி, அக்னி குண்டத்தில் விழுந்து காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.மளிகை கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

முடிச்சூர், மேற்கு லட்சுமி நகரைச் சேர்ந்தவர், முருகேசன், 45; மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, நேற்று முன்தினம் வந்த சிலர், குளிர்பானம் வாங்கியுள்ளனர்.

அதற்கு பணம் கேட்ட போது ஏற்பட்ட தகராறில், முருகேசனை அரிவாளால் வெட்டி, அந்த நபர்கள் தப்பினர். காயமடைந்த முருகேசனுக்கு, மருத்துவமனையில், 18 தையல்கள் போடப்பட்டன. பீர்க்கன்காரணை போலீசார், மணிமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 23, உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.லாரி மோதி பெண் படுகாயம்

எர்ணாவூர், எர்ணீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர், பஷீர். அவர் மனைவி, சமீரா 35. இவர், நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில், பள்ளியில் படிக்கும், தனது குழந்தைகளை அழைத்து வர சென்றார். எர்ணாவூர் மேம்பாலம் இறக்கம், லிப்ட் கேட் நான்கு முனை சந்திப்பில், திரும்பும் போது, வேகமாக வந்த கன்டெய்னர் லாரி மோதி, அவர்

படுகாயமடைந்தார். சமீரா, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரி ஓட்டுனர் தப்பினார்.மோசடி வழக்கில் தாய், மகன் கைது

முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர், ஆலிலை வேந்தன், 23; பொறியியல் கல்லுாரி மாணவர். இவரது தாய், தெய்வஜோதி, 44. இவர்களது வீட்டுக்கு, ஆலிலை வேந்தனுடன் படிக்கும், அண்ணாநகர், பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த, சபரீஷ் ஆனந்த் அடிக்கடி வந்து சென்றார்.

குடும்ப நண்பர்களாகினர். ஆலிலை வேந்தன், அவரது தாய் தெய்வஜோதி ஆகியோர், சபரீஷ் ஆனந்தின் தாய், விசாலாட்சியிடம், திருப்பதி தேவஸ்தானத்தில், லட்டு தயாரிக்க ஒப்பந்தம் எடுத்து இருப்பதாகவும், அதற்கு, 60 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறி, பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர்.

விசாலாட்சி, சில தினங்களுக்கு முன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று, தெய்வஜோதி, ஆலிலைவேந்தனை கைது செய்தனர்.இன்ஸ்பெக்டரை மிரட்டிய ரவுடி சரண்

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில், பிப்., 6ல், ரவுடிகள், 'கேக்' வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினர். இச்சம்பவத்திற்கு பின், போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். தேனாம்பேட்டை, சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர், கிரி, அதே பகுதியைச் சேர்ந்த, ரவுடிகளை பிடித்து விசாரித்துள்ளார்.

ஆத்திரமடைந்த, தேனாம்பேட்டை தாமஸ் சாலையைச் சேர்ந்த, ரவுடி, பிரதீப், 35, என்பவன், இன்ஸ்பெக்டரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மிரட்டி உள்ளான். போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவன், தேனாம்பேட்டை போலீசில் சரணடைந்தான்.தலைமறைவு குற்றவாளி கைது

சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர், லோகநாதன், 42. இவர், 2014, ஜன., 31ம் தேதி இரவு, கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு, ரயிலில் சென்றார். பள்ளிக்கரணையைச் சேர்ந்த, தமிம் அன்சாரி, கோபி, சிவா ஆகியோர், தாம்பரம் பிளாட்பாரத்தில், லோகநாதனை மிரட்டி, பணம், மொபைல்போனை பறிக்க முயன்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, கத்தியால் குத்திக் கொன்றனர். இந்த வழக்கில், மூவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்த போது, சிவா இறந்துவிட்டான். ஜாமினில் வெளியே வந்த, மற்ற இருவரும் தலைமறைவாகினர். போலீசார், அவர்களை தேடினர். இதில், தமிம் அன்சாரியை, எழும்பூர் ரயில்வே போலீசார், நேற்று கைது

செய்தனர். கோபியை தேடி வருகின்றனர்.முதியவரிடம் நகை பறிப்பு

ஆவடி, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர், கண்ணன், 67; ஓய்வு பெற்ற ஆசிரியர். அவர், நேற்று காலை, 10:00 மணி அளவில், அம்பத்தூர் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த இருவர், 'நாங்கள் ஆவடிக்கு செல்கிறோம். உங்களை அங்கு விட்டுவிடுகிறோம்' என, அவரை வற்புறுத்தி, ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். அம்பத்தூர், அத்திப்பட்டு அருகே, அவர் அணிந்திருந்த, 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு, இறக்கிவிட்டனர். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X