போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
02:01

கார் மோதி 2 பெண்கள் பலி

மதுரை: பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன் மனைவி பெரியா,39. இவரது மருமகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு உடல்நலம் பாதித்தது. அவரை மகன் கார்த்திக், கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். மருமகளை பார்க்க பெரியாவும், மருமகளின் தாயார் அழகுபொண்ணும்,40, கள்ளந்திரி வந்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து மனைவியுடன் கார்த்திக் கிளம்பினார். அழகுபொண்ணும், பெரியாவும் நடந்து வந்தனர். நீண்டநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை அழகர்கோவில் ரோடு - நத்தம் ரோடு சந்திப்பு அருகே முட்புதரில் இருவரும் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில், கார் ஒன்று மோதியதில் இருவரும் இறந்தது தெரியவந்தது. கார் டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.



105 பவுன் நகை திருட்டு

மதுரை: திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மனைவி சங்கீதா. திருப்புவனம் செல்வதற்காக ஆட்டோவில் பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, அரசு பஸ்சில் ஏறியபோது பையில் இருந்த 28 பவுன் நகை திருடுபோனது. திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோச்சடை நடராஜ் நகர் பிரான்சிஸ். ஓய்வுபெற்ற அரசு பஸ் ஊழியர். குடும்பத்துடன் திண்டுக்கல் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து 74 பவுன் நகை திருடப்பட்டது.

விளாங்குடி செம்பருத்தி நகர் முத்துக்குமார். குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தபோது, பின்கதவை உடைத்து 3 பவுன் நகையை மர்மநபர் திருடிச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.



கொலை வழக்கில் சரண்

மேலுார்: ஒத்தக்கடை அருகே மயிலங்குண்டை சேர்ந்த கவுசல்யாவை, நேற்று முன்தினம் கணவர் தசரதன் தாக்கினார். ஆத்திரமுற்ற மைத்துனர் விளாத்துார் பிரபு,33, தில்லைவாசகம்,31, கட்டையால் தாக்கியதில் தசரதன் இறந்தார். நேற்று மேலுார் நீதிமன்றத்தில்இருவரும் சரணடைந்தனர்.



வீட்டில் திருட்டு

வாடிப்பட்டி: அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல்சாமி,48.இந்து முன்னணிமாநில நிர்வாகக்குழு உறுப்பினர். சின்னாளபட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அய்யங்கோட்டை வீட்டில் 12 பவுன் நகைகள், ரூ.27 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது. வாடிப்பட்டி போலீசார் விசாரிகின்றனர்.



மகள் கொலை: தந்தை கைது

பேரையூர்: வில்லுாரை அடுத்த ராமநாதபுரம் முருகன்,40. விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி,30. மகள் இருளாயி,9, மகன்வேல்முருகன்,6. சந்தேகம் காரணமாக லட்சுமியை 8 மாதமாக முருகன் துன்புறுத்த, அதுகுறித்து லட்சுமியின் பெற்றோரிடம் இருளாயி தெரிவித்தார். இதனால் முருகன் கண்டிக்கப்பட்டார். ஆத்திரமுற்ற முருகன் நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்த இருளாயி, லட்சுமியை கோடாரியால் வெட்டியதில் இருளாயி இறந்தார். லட்சுமி சிகிச்சை பெறுகிறார். மகன் உயிர் தப்பினார். முருகன் கைது செய்யப்பட்டார்.



விபத்தில் விவசாயி பலி

வாடிப்பட்டி: சின்னமநாயக்கன்பட்டி விவசாயி சக்திவேல்,46. நேற்று மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் விராலிப்பட்டி பிரிவில் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) திரும்பிய போது கரூரில் இருந்து மதுரை நோக்கி வந்த லாரி மோதியதில் இறந்தார்.



நீதிமன்ற ஊழியர் பலி

வாடிப்பட்டி: பரவை பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சேதுராம், 56. மாவட்டநீதிமன்ற ஜே.எம் 2.

ஊழியர். இவர் எப்போதும் குடியிருப்பு அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து தான், நடைபயிற்சிக்கு செல்வார். நேற்று காலை தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தார்.



போலீஸ்காரர் கைது

திருமங்கலம்: கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் தர்மலிங்கம், 28. இவர் முத்துலட்சுமி என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி திருப்பி தரவில்லை. எஸ்.பி.,யிடம் புகார் செய்ததால் தர்மலிங்கம் ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டார். ஆத்திரமுற்ற அவர் முத்துலட்சுமியை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X