| சிட்டி கிரைம் Dinamalar
சிட்டி கிரைம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
01:46

மூதாட்டி தற்கொலை:

கோபி பி.எம்.பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள், 66; இவர், திருப்பூர் காந்தி நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மாரியம்மாள், ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தொழிலாளி தற்கொலை:

திருப்பூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 41; பனியன் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம், வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


மதுவால் மரணம்:

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்தவர் சரவணன், 41. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த, 14ம் தேதி அவிநாசி ரோட்டில் பஸ் ஸ்டாப் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாலிபர் மாயம்:

திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார், 27; இவர், "ஷேர் டிரேடிங்' தொழில் செய்து வந்தார். இதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.



 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X