போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 பிப்
2018
06:57

விபத்தில், 'மாஜி' கவுன்சிலர் மகன் பலி

பட்டாபிராம், கிழக்கு

கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர், நாராயணசாமி; ஆவடி நகராட்சி முன்னாள் சுயேச்சை கவுன்சிலர். இவரது மகன் பிரசன்னராஜ், 22; டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படித்தவர்.

நேற்று முன்தினம், ஆவடி, சி.டி.எச்., சாலையில், பிரசன்னராஜ், நண்பர் ஐசக்கின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல,

அவரது மற்றொரு நண்பர் அமல்ராஜ், பின் தொடர்ந்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

பட்டாபிராம் இந்து கல்லுாரி அருகே, குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க, பிரசன்னராஜ் பிரேக் பிடித்ததில், சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார். அப்போது, பின் தொடர்ந்து வந்த, அமல்ராஜின் இருசக்கர வாகனம், பிரசன்ன

ராஜ் மீது ஏறியது. இதில், பிரசன்னராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். நண்பர்கள் இருவரும், காயங்களுடன் தப்பினர்.

டூ -- வீலர் திருட முயன்ற சிறுவர்கள் சிக்கினர்

வளசரவாக்கம், அரசு பள்ளி வளாகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனத்தை, நான்கு சிறுவர்கள், நேற்று காலை, திருட முயன்றனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், இரண்டு சிறுவர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வளசரவாக்கம் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. சிறுவர்களை எச்சரித்த போலீசார், அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

16 வயது சிறுமி மாயம்

கே.கே.நகர், ராணி அண்ணாநகர் குடியிருப்பைச் சேர்ந்தவர், ராஜா, 52. அவரது மகள் தேவி கிருபா, 16. அவர், நேற்று முன்தினம் இரவு, குடத்தில் தண்ணீர் பிடிக்க சென்றார். பின், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

பூட்டை உடைத்து 23 சவரன் திருட்டு

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர், கோபால், 50; அதே பகுதியில், டீ மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில், கடைகள், வீடும், மேல் தளத்தில் வீடும் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடைகளை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று காலை வந்தபோது, கடைகளின் கதவு

கள் உடைக்கப்பட்டிருந்தன. டீ கடைக்குள் புகுந்த திருடர்கள், எதுவும் இல்லாததால், பக்கத்தில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து, கடை வழியாகவே, வீட்டிற்குள் புகுந்து, 23 சவரன் நகை, 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி உள்ளனர். அடுத்த வீட்டில் புகுந்து, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் திருடியுள்ளனர். பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயிலில் அடிபட்டு நகராட்சி ஊழியர் பலி

குரோம்பேட்டை, லட்சுமிபுரம், பொன்னப்ப நாயக்கன் விரிவு தெருவைச் சேர்ந்தவர், ராஜசேகர், 46; பல்லாவரம் நகராட்சி, துப்புரவு

மேற்பார்வையாளர். நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஜமீன் பல்லாவரத்தில் பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பல்லாவரம் ரயில் நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தை, ஓரமாக நிறுத்திவிட்டு, அவர், தண்டவாளம் ஓரம் சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் மோதி, ராஜசேகர் தலை துண்டாகி இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏ.டி.எம்., தீப்பிடித்து எரிந்தது

ஆதம்பாக்கம், சிட்டி லிங்க் சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்., ஒன்று, நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்தது. அந்த வழியாக சென்றவர்கள், போலீசார் உதவியுடன் தீயை அணைத்தனர். ஏ.டி.எம்.,மில் உள்ள, 'ஏசி' இயந்திரத்தில், மின்

கசிவு ஏற்பட்டு, தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. உடனே, தீ அணைக்கப்பட்டதால், ஏ.டி.எம்.,மில் இருந்த பணமும், பக்கத்து கடைகளும்

தப்பின. ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆபாச படம் அனுப்பிய இன்ஜினியர் கைது

ஆவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மர்மநபர் ஒருவர், 'வாட்ஸ் ஆப்'பில், ஆபாச படம் அனுப்பியதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில், வேலுாரைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரியான மாணிக்கம், 22, என்பவர், ஆபாச படம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, மாணிக்கத்தை நேற்று கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

ரூ.2 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்

பரங்கிமலை, மீனவர் தெருவைச் சேர்ந்தவர், பாஸ்கர், 50; ஆட்டோ ஓட்டுனர். இவரது ஆட்டோ

வில், கிண்டியில் இருந்து கோயம்பேட்டிற்கு, நேற்று மாலை, ஒருவர் பயணித்தார். அவர், '2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லரை கேட்டதால், ஈக்காட்டுதாங்கலில் ஆட்டோவை நிறுத்திய பாஸ்கர், டாஸ்மாக் கடையில் சில்லரை மாற்றச் சென்றார். அங்கு, நோட்டை பார்த்த டாஸ்மாக் ஊழியர், 'இது கள்ள நோட்டு' என, கூறியுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் பயணியை பிடித்த பாஸ்கர், கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில், பிடிபட்டவர், பாரிமுனையைச் சேர்ந்த முகமது ரசூல் என்பதும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சி லாரிகளில் டீசல் திருட்டு

சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர், லோகநாதன், 52; மாநகராட்சி டிரைவர். இவர், கொடுங்கையூர், குப்பை கிடங்கு லாரிகளில் இருந்து, டீசலை திருடி, குப்பை கிடங்கில் மறைத்து வைத்து, விற்பனை செய்து வந்தார். இது குறித்து, சக ஊழியர்கள் கொடுத்த புகாரில், கொடுங்கையூர் போலீசார், அவரிடம் விசாரிக்கின்றனர். மேலும், குப்பை கிடங்கில், 40 கேன்களில் மறைத்து வைத்திருந்த, 900 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X