போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 மார்
2018
02:01

மது பாட்டில்கள் பறிமுதல்

காடுபட்டி: சோழவந்தான் இன்ஸ் பெக்டர் பாலாஜி தலைமையில்

போலீசார் நேற்று முன் தினம் இரவுமேலக்கால், விக்கிரமங்கலம்ரோட்டில் ரோந்து சென்றனர். தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நின்ற வேனைசோதனையிட்டனர்.

432 மது பாட்டில்கள் இருந்தது

தெரிந்தது. வேனை போலீசார்

பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.----------

துாக்கிட்டு தற்கொலை

உசிலம்பட்டி: மேலப்புதுார் காளியம்மன் கோயில் தெரு முத்துப்பாண்டி மகன் லிங்கேஷ் ,16. பத்தாம் வகுப்பு படித்தார். வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயார் சாரதா புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.--------

உண்டியல் திருடன் கைது

பேரையூர்: இ.கோட்டைப்பட்டி ராஜ்

குமார், பாஸ்கரன், பிரபாகரன், தினேஷ்குமார் ஆகியோர் நேற்று முன் தினம் பேரையூர் அருகே எ.கிருஷ்ணாபுரம் முனியாண்டி சுவாமி கோயில்

உண்டியலை உடைத்துள்ளனர். சத்தம் கேட்ட மக்கள் ராஜ்குமாரை மட்டும் பிடித்து சாப்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். விசாரணையில் இரு மாதங்களுக்கு முன் சாப்டூர் ஆனந்த மாரியம்மன் கோயில் உண்டியலை இவர்கள் திருடியதையும் ஒப்புக் கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.--------

வேன் மோதி மாணவி காயம்

உசிலம்பட்டி: செட்டியபட்டி சன்னாசி மகள் பெருமாயி, 20. உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பள்ளியில் பிளஸ் 2

படிக்கிறார். நேற்று ஆங்கிலம் முதல் தாள் எழுதி விட்டு ஊர் திரும்ப

தொட்டப்பநாயக்கனுார் பஸ்சில் சென்று தொ.விலக்கில் இறங்கினார். அங்கிருந்து செட்டியபட்டி செல்ல ரோட்டை கடந்த போது தேனியில் இருந்து சென்ற கே.ஏ.எஸ்., பஸ் மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறு

கிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.-------

பெண்ணுக்கு வெட்டு

மதுரை: கப்பலுார் முத்துலட்சுமி, 27. வாடிப்பட்டி அருகே சத்திர

வெள்ளாளப்பட்டி சந்திரசேகர், 35. சேலத்தில் போர்வெல் கம்பெனி மேலாளராக உள்ளார். இருவருக்கும் 4 ஆண்டுகளாக அறிமுகம் இருந்தது. அலைபேசியில் முத்துலட்சுமி

சிலரிடம் பேசி வந்ததால் சந்திரசேகர் சந்தேகமுற்றார். நேற்று மதியம்

மதுரைக்கல்லுாரி அருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த முத்து

லட்சுமியை சந்திரசேகர் அரிவாளால் வெட்டியதாக ஜெய்ஹிந்த்புரம்

போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ரூ.ஒரு கோடி மோசடி

மதுரை: சிங்கராயர் காலனி அப்துல்காதர் ஜிலானி,70. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மகன் ேஷக்பரீத்தை மைசூரு ஜே.எஸ்.எஸ்., மருத்துவக்கல்லுாரியில் எலும்பு முறிவு சிகிச்சை படிப்பில் சேர்ப்பதாக கூறி பெங்களூரு மோசின் ெஷரீப் உட்பட 6 பேர் மொத்தம் ஒரு கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தனர். மத்திய குற்ற

பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை பறிப்பு

மதுரை: ஆத்திக்குளத்தைச் சேர்ந்தவர் தங்கபாப்பா, 65. திருமங்கலத்தில்

உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்று விட்டு, மகாலட்சுமிநகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து சென்றார். அப்போது டூவீலரில் சென்ற 2 பேர், தங்கபாப்பாவின் இரண்டே முக்கால் பவுன் நகையை பறித்துச்சென்றனர். தல்லாகுளம் போலீசார் விசாரிக்

கின்றனர்.----------

விபத்தில் பெண் பலி

திருமங்கலம்: வலையங்குளத்தை சேர்ந்தவர் கவிதா, 35. உறவினர் தனசேகரனுடன்,32, ெஹல்மெட் அணி

யாமல் டூவீலரில் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பினார். எலியார்பத்தி அருகே நான்கு வழிச்சாலையில் எதிரே சென்ற அரசு பஸ் மோதியதில் கவிதா இறந்தார். டிரைவர் இருளனை, 40, போலீசார் கைது செய்தனர்.-----------

முன்னாள் ராணுவ வீரர் பலி

திருமங்கலம்: செங்குளம் முன்னாள் ராணுவவீரர் சந்திரன், 62. நேற்று

அதிகாலை குதிரைசாரி குளம் அருகே நான்குவழிச்சாலையில் 'வாக்கிங்' சென்றபோது, வாகனம் ஒன்று மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.------

மாணவியை கொல்ல முயற்சி

திருமங்கலம்: பாறைக்குளம்

மணிகண்டன், 25. தனியார் நிறுவன ஊழியர். சோழபுரத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்தார். இதற்கு மாணவி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று தந்தையுடன்

டூவீலரில் மாணவி பள்ளி சென்றபோது வழிமறித்த மணிகண்டன், நண்பர் பிரபாகரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.


 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X