சிறை மாற்றாமல் இருக்க கைதியிடம் லஞ்சம் கையும், களவுமாக பிடிபட்டார் புழல் சிறைக்காவலர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மார்
2018
14:34
பதிவு செய்த நாள்
மார் 08,2018 03:06

புழல்: வேறு சிறைக்கு, இடம் மாற்றம் செய்யாமல் இருக்க, கைதியிடம் லஞ்சம் வாங்கிய, சிறை காவலர் கைதான சம்பவத்தில், அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது.

சென்னை, புழலில், 220 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய சிறை, மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்டது. விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் சிறை ஆகியவற்றில், மொத்தம், 3,000 பேர் வரை, இங்கு அடைக்கலாம்.


கைதியிடம் பேரம் : நேற்றைய நிலவரப்படி, 2,300க்கும் அதிகமானோர், இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பல கைதி களுக்கு, மொபைல் போன், கஞ்சா போன்ற தடை

செய்யப்பட்ட பொருட்கள் சாதாரணமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.அதற்காக, கணிசமான தொகை, கைதிகளின் உறவினர்கள் மூலம், சிறை காவலர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

உயர் அதிகாரிகள், பணம் பெறும் காவலர்களிடம் விசாரிக்கும் போது, சிறையில் உள்ள அதிகாரி

களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. கடந்த, ஆறு ஆண்டுகளில், கைதிகளுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், நான்கு சிறைக்காவலர்கள் மீது, சிறைத்துறை நிர்வாகம் நட

வடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த, மதின் அபுபக்கர், 45, என்பவர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, ஓராண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில் கைதிகளின் கோஷ்டி மோதலை தடுக்கும் நடவடிக்கையாக, சில கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர். அந்த வகையில், புழல் சிறையில் இருந்த அபுபக்கரிடம், 'பூந்தமல்லி சிறப்பு தனி சிறைக்கு, உன்னை மாற்றப் போகின்றனர்' என, தலைமைக் காவலர் பிச்சய்யா, 40, தகவல் தெரிவித்துள்ளார்.அபுபக்கர், 'எனக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை; இங்கேயே இருக்கிறேன்' என, கூறியிருக்கிறார்.அதற்கு, 'ஜெயிலர்

உட்பட சிறை அதிகாரிகளின் ஆதரவு வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், நீ இங்கேயே இருக்க, அவர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன்' என, பிச்சய்யா பேரம் பேசியிருக்கிறார்.


தற்காலிக பணிநீக்கம் : இறுதியில், 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஒத்துக்கொண்டு, முன் பணமாக, 40 ஆயிரம் ரூபாயும், மீதி தொகையை அடுத்த வாரம் கொடுப்பதாகவும், அபுபக்கர் கூறியிருக்கிறார்.இது குறித்து, தன்னை சந்திக்க வந்த உறவினர் ஜியாவிடம் தெரிவித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்யுமாறு கூறியிருக்கிறார்.அவரும், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., குமரகுரு தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் இரவு, புழல் பேருந்து நிறுத்தம் அருகே காத்திருந்தனர்.

இரவு, 10:45 மணி அளவில் அங்கு சென்ற பிச்சய்யா, கைதி அபுபக்கரின் உறவினரான ஜியாவிடம் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, சிறை வளாகத்தை ஒட்டி உள்ள காவலர் குடியிருப்புக்கு சென்றார்.அவரை பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய பணத்துடன் மடக்கி பிடித்து, புழல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, நேற்று அதிகாலை, 6:00 மணி வரை, பிச்சய்யாவிடம் விசாரித்தனர்.அப்போது, ஜெயிலர் ஜெயராமன் உத்தரவால் தான் லஞ்சம் வாங்கியதாகவும், அதற்கு மேலும், நான்கு சிறை காவலர்கள் உடந்தை என்றும், தெரிவித்தார்.பிச்சய்யாவை கைது செய்த போலீசார், திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்

படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவர், தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டார்.ஜெயிலர் ஜெயராமன் மற்றும் காவலர்கள் உட்பட ஐந்து பேரிடம், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லஞ்ச வழக்கில் ஜெயிலர் ஜெயராமனும் கைது

செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
08-மார்-201819:09:03 IST Report Abuse
Indhuindian முதலில் அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் அடங்கச்சொல்லுங்க அவங்க ஓஷுங்காக இருந்தா கீஷேவுள்ளவர்களும் அடங்குவார்கள் மேல் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.