எம்.எம்.சி.ஏ.,விற்கு எதிராக போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 மார்
2018
05:52

கோயம்பேடு:கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாக பராமரிப்பை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோயம்பேட்டில், காய், கனி, பூ அங்காடிகளுக்கு, அடுத்தபடியாக, 89 கோடி ரூபாய் செலவில், 492 கடைகளுடன், உணவு தானிய அங்காடி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தின் பராமரிப்பு பணியை, உணவு தானிய வணிகர் சங்கம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த, 5ம் தேதியில் இருந்து, அந்த பராமரிப்பு பணியை, எம்.எம்.சி.ஏ., ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, தனியார் நிறுவனத்திடம், பராமரிப்பு பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உணவு தானிய வணிகர் சங்கம் சார்பில், நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.


இதுகுறித்து, உணவு தானிய வணிகர் சங்கத்தினர் கூறியதாவது:வணிக வளாகத்தின் பராமரிப்பு பணியை, சிறப்பாக செய்து வந்தோம். எங்கள் சங்கத்தை கலந்தாய்வு செய்யாமல், பராமரிப்பு பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், வாகனங்களுக்கான கட்டணத்தை, பல மடக்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். இதனால், வணிகர்களுக்கு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தனியார் பேருந்துகள் நிறுத்தம்


எம்.எம்.சி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'உணவு தானிய வணிக வளாகத்தில், தனியார் பேருந்துகளை நிறுத்த, அவர்கள் அனுமதித்துள்ளனர். எம்.எம்.சி.ஏ., அனுமதி இன்றி, வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தனர். உணவு தானிய கிடங்கில், காய்கறி விற்பனையும் நடத்தப்பட்டது. இதனால், உணவு தானிய கிடங்கு பராமரிப்பை, எம்.எம்.சி.ஏ., ஏற்றுக்கொண்டது' என்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X