தேசிய பீச் வாலிபால்: தமிழகம் சாம்பியன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 மார்
2018
22:30

பெசன்ட் நகர் : பெசன்ட் நகரில் நடந்த, தேசிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக பெண்கள் அணியினர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்திய வாலிபால் கூட்டமைப்பு ஆதரவுடன், வேலம்மாள் கல்விக் குழுமம் மற்றும் வாலிஸ் கிளப் சார்பில், தேசிய அளவிலான பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடந்தது. மார்ச் 5ல் துவங்கிய போட்டி, நேற்று முன்தினம் இரவுடன் முடிந்தது. இதில், தமிழகத்தின் சார்பில், நான்கு அணிகள் உட்பட ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட, பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த, ஆண்கள் பிரிவில், 40 அணிகளும், பெண்கள் பிரிவில், 30 அணிகளும் பங்கேற்றன. போட்டிகள், 'லீக் மற்றும் நாக் - அவுட்' முறையில் நடைபெற்றன.

நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில், தமிழகம், 1வது அணியை, 21 - 14, 22 - 11 என்ற செட் கணக்கில், நடப்பு சாம்பியனான, தமிழகம், 2வது அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ஆண்களுக்கான போட்டியில், இந்திய ரயில்வே அணி, 21 - 18, 21 - 11 என்ற புள்ளிக் கணக்கில், கோவா, 1வது அணியை தோற்கடித்தது. முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த அணிக்களுக்கான கோப்பைகளை, அமைச்சர், பாலகிருஷ்ண ரெட்டி வழங்கினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.