அடையாற்றில் அதிகரிக்கும் கழிவுநீரால் அதிர்ச்சி: தடுப்பணையில் நீர் தேக்குவது தவிர்ப்பு; நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மார்
2018
14:33
பதிவு செய்த நாள்
மார் 08,2018 23:03

அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகரித்துள்ளதால், நந்தம்பாக்கம் தடுப்பணையில், தண்ணீர் தேக்கி வைக்கும் திட்டத்தை, பொதுப்பணித்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தடுப்பணையில் இருந்து தண்ணீர், கடலுக்கு திறந்து விடப்படுவதால், சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்வளமும், நீர்மட்டமும், இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆதனுாரில் இருந்து பட்டினம்பாக்கம் வரை, அடையாறு ஆறு, 42 கி.மீ., நீளம் கொண்டது. கோடையில் தண்ணீரை தேக்கி வைக்க, மணப்பாக்கம் பகுதியில் ஒரு தடுப்பணை இருந்தது. ஆற்றின் மேல், விமான நிலைய ஓடுபாதை அமைத்தபோது, தடுப்பணை அகற்றப்பட்டது. அதன்பின், 2004ல், நந்தம்பாக்கம் பகுதியில், 14 ஷட்டர்கள் கொண்ட தடுப்பணை அமைக்கப்பட்டது. அந்த பகுதி, 130 மீட்டர் அகலம் கொண்டது.


பருவ மழையின்போது, அனைத்து ஷட்டர்களும் திறந்து இருக்கும். கோடையில், நிலத்தடி நீர் அதிகரிக்கும் வகையில், பிரதான ஷட்டர்கள் மூடப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.


தண்ணீர் பற்றாக்குறை:


தடுப்பணையில் இருந்து, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய தரைப்பாலம் வரை, 2 கி.மீ., துாரம், 130 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்தில், 50 மில்லியன் கனஅடி நீர், தேக்கி வைக்கப்படும். இதனால், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், துளசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய வளாகத்தில், கோடையில் நிலத்தடி நீர் அதிகரித்து, தண்ணீர் பற்றாக்குறை

கட்டுக்குள் இருந்தது.


இந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. மேலும், எப்போதும் இல்லாததை விட, அதிகளவு கழிவுநீர் கலந்து வருகிறது.

திருமுடிவாக்கம், திரிசூலம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதியில் செயல்படும், தொழிற்

சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரித்து, ஆற்றில் விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், முறையாக சுத்திகரிக்காமல் ஆற்றில் விடுகின்றனர்.


ஷட்டர்கள் திறப்பு:


முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில், முன் வடிகால் கட்டமைப்பு வசதி இல்லை. இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, 85 கோடி ரூபாயில், 38 கி.மீ., துாரத்தில், மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. இவை, அடையாறு ஆற்றில் இணைக்கப்பட்டு உள்ளது. இரண்டு இடங்களிலும், கழிவுநீர் இணைப்பு வசதி இல்லாததால், பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவு நீரை, வடிகாலில் விடுகின்றனர். அவை, அடையாறு ஆற்றில் கலக்கிறது.


இதனால், கடந்த ஆண்டை விட, தடுப்பணை பகுதியில், 2 கி.மீ., துாரம், நல்ல தண்ணீரின் அளவு கணிசமாக குறைந்து, கழிவுநீர் அதிகம் தேங்கி உள்ளது. நிலத்தடி நீர் மாசுபடும் என்பதால், அனைத்து ஷட்டர்களும் திறந்து வைக்கப்பட்டு உள்ளன.தடுப்பணையில் நீர்த் தேக்கம் தடைபட்டதால், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், கோடையின் போது, தடுப்பணையில் நீர் தேக்கி வைக்கப்படும். இதுவரை, கோடையில் சுற்றி உள்ள பகுதியில், தண்ணீர் பிரச்னை ஏற்படவில்லை. கழிவுநீர் வரத்து அதிகரித்ததால், மாசடைந்த நீரை தேக்கி வைக்க முடியாது. அனைத்து ஷட்டர்களை திறந்து, நீரை கடலில் விடுகிறோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து, கழிவுநீரை ஆற்றில் விடுவதை தடை செய்தால் மட்டுமே, தடுப்பணையில், நல்ல நீரை தேக்கி வைக்க முடியும்.


-பொதுப்பணித்துறை அதிகாரிகள்


-நமது நிருபர் --

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-மார்-201805:02:20 IST Report Abuse
J.V. Iyer ஆற்றில் கழிவுநீர் கலப்பது ஏன்? ஐம்பது ஆண்டு காலத்தில், அரசியல் என்ற ஆற்றை தீரா-விஷம் கழகங்கள் போன்ற கழிவுநீர் கலந்ததால்தான். இதை ஏன் மக்கள், தமிழ் நாடு மக்கள் உணரவில்லை? ஆட்டு மந்தைகளாகிவிட்டார்கள்? அவர்கள் கண்களை மறைப்பது எது? அரசியலை சாக்கடையாக்கிவிட்ட இந்த தீரா-விஷக்கழகங்கள் எல்லா ஆற்றையும் சாக்கடையாக்கிவிட்டார்கள், மணல் வாரி எடுத்து காணாமல் போக்கி விட்டார்கள். தேவையான நேரத்தில் செயல் படாமல், தான் மத்தியில் ஆட்சி செய்த போடும், காவிரி தண்ணீரை கானல் நீராக்கி விட்டார்கள். இப்போதும், இந்த பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடுகிறார்கள். கட்சியை குடும்ப முன்னேற்ற கழகமாக்கி விட்டார்கள். தமிழகத்தை இருளகமாக்கி விட்டார்கள். பயமுறுத்தி நல்லவர்களை அரசியலுக்கு வர வேண்டாம் என்று மிரட்டுகிறார்கள். சிலைகளை தானே உடைத்து கலவரம் செய்கிறார்கள். மக்களே விழித்தெழுங்கள். பயந்தது போதும். உங்களை வழிநடத்த தலைவன் வந்துவிட்டான்.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
09-மார்-201812:46:49 IST Report Abuse
christ நம் நாட்டில் மட்டுமே ஆற்றை கழிவு நீர் கலக்கும் இடமாக பயன்படுத்துகின்றனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X