போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2018
00:33

பெண்களிடம் 25 சவரன் பறிப்பு

பம்மல் அடுத்த பொழிச்சலுார், வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர், சுகந்தி, 52. இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வந்த மர்ம நபர், வாடகைக்கு கடை கிடைக்குமா என்று கேட்டார். திடீரென சுகந்தியை கீழே தள்ளிய மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, 10 சவரன் நகையை பறித்தார். சுகந்தி சத்தமிட்டதால் பயந்த மர்ம நபர், கீழே விழுந்த தன் மொபைல் போனை எடுக்காமல் தப்பினார். மொபைலை கைப்பற்றிய சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


 வளசரவாக்கம், பெத்தானியா நகரைச் சேர்ந்தவர், சுசிலா, 62. இவர், நேற்று முன்தினம் இரவு, உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சுசிலாவின், 5 சவரன் செயினை பறித்து தப்பினர்.


 வளசரவாக்கம், எஸ்.பி.எஸ்., காலனியைச் சேர்ந்த சத்தியவதி, 54. அவர், நேற்று முன்தினம் இரவு, கடைக்கு சென்று வீடு திரும்பினார். வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்ற போது வந்த மர்ம நபர், அவரது, 10 சவரன் செயினை பறிக்க முயன்றார். அவர் கெட்டியாக பிடித்ததால், பாதி செயினை பறித்துக் கொண்டு, மர்ம நபர் தப்பினார். இந்த சம்பவங்கள் குறித்து, வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இணை ஆணையரின் மொபைல்போன் பறிப்பு:


நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர், தேவேந்திர பூபதி; மாநில வரித்துறை இணை ஆணையர். இவர், நேற்று காலை, 7:00 மணியளவில், வீட் கிராப்ஸ் சாலையில், நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



தொழிலாளியை வெட்டி வழிப்பறி :


மெரினா லுாப் சாலையைச் சேர்ந்தவர், சுரேஷ், 28; கூலித் தொழிலாளி. அவர், நேற்று முன்தினம் இரவு, 11:55 மணியளவில் மெரினா, சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, பணம்

மற்றும் மொபைல் போனை கேட்டுள்ளது. தராததால் ஆத்திரமடைந்த ஒருவன், சுரேஷின் கையில் கத்தியால் வெட்டியுள்ளான். பின், சுரேஷின் மொபைல் மற்றும், 15 ஆயிரம் ரூபாயை பறித்து, அந்த கும்பல் தப்பியது. காயமடைந்த சுரேஷ், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.



பைக் திருடிய 3 சிறுவர்கள் கைது:


கோயம்பேடு, ஸ்ரீ அய்யப்பா நகரைச் சேர்ந்தவர், கணேஷ், 32; தனியார் நிறுவன ஊழியர். அவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டிற்கு முன், இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். காலையில், இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், திருவேற்காட்டைச் சேர்ந்த, 13 வயது சிறுவர்கள் மூவரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.



ரூ.2 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் :


செங்குன்றம், பாடியநல்லுாரைச் சேர்ந்தவர், விஷாகராஜ், 43. இவர், நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள திருமலைவாசா நகரில், 'டாடா மேஜிக்' வாகனத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் போதை பொருட்களை கொண்டு சென்றார். வாகன சோதனையில் ஈடுபட்ட செங்குன்றம் போலீசார், போதை பொருட்களை பறிமுதல் செய்து, விஷாகராஜை கைது செய்தனர்.


 வேளச்சேரி, நேரு நகரில், மாவா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, மாவா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பீஹாரை சேர்ந்த, சோனுகுமார், 22, அசோக் ஷா, 25, சவுரப்குமார், 38, ஆகிய மூவரை கைது செய்த போலீசார், 10 கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர்.



பெண்ணிடம் மொபைல்போன் பறிப்பு:


வளசரவாக்கம், ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர், நாகலட்சுமி, 25; அடையாறில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர். அவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பெருமாள் கோவில் தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



ரயிலில் அடிபட்டு இருவர் பலி:


பல்லாவரம் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர், மின்சார ரயிலில் அடிபட்டார். காயமடைந்த அந்த நபரை மீட்ட பொதுமக்கள், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர், நேற்று உயிரிழந்தார்.


 அதே போல், குரோம்பேட்டை - -தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்ட

வாளத்தை கடக்க முயன்ற, 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ரயிலில் அடிபட்டார்.

அதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இரண்டு சடலத்தையும் மீட்ட தாம்பரம் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து

விசாரிக்கின்றனர்.



ரயிலுக்கு காத்திருந்த முதியவர் பலி:


பெரம்பூர், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர், பார்த்தசாரதி, 65. அவர், நேற்று மதியம், 1:30 மணியளவில் கொரட்டூர் ரயில் நிலையத்தில், பெரம்பூர் செல்வதற்காக காத்திருந்தார். வெயிலின் தாக்கத்தால், பார்த்தசாரதி திடீரென சுருண்டு விழுந்து பலியானார். பெரம்பூர் ரயில்வே

போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X