கையெழுத்தில், 'தில்லுமுல்லு' ஜாமினில் வெளிவந்தவர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2018
00:59

திருவல்லிக்கேணி : நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தவர், காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதில், தில்லுமுல்லில் ஈடுபட்டதால், மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தென்காசியைச் சேர்ந்தவர், புகாரி, 35; மணல் வியாபாரி. கடந்த ஆண்டு, பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில், தடா ரகீமின் ஆதரவாளர்கள், புகாரியை கடத்தி, திருவல்லிக்கேணி விடுதியில் அடைத்து, சித்ரவதை செய்தனர்.அவரை மீட்ட திருவல்லிக்கேணி போலீசார், கடத்தலில் ஈடுபட்ட தடா ரகீம், சுலைமான், 35, ரசூல், 37 உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.சுலைமான், ரசூல் ஆகிய இருவரும், நிபந்தனை ஜாமினில், பிப், 14ல் வெளியே வந்தனர். அவர்கள் இருவரும், பிப், 15 முதல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர்.மார்ச், 5ல், காவல் நிலையத்திற்கு சென்ற ரசூல், சுலைமானுக்கும் சேர்த்து கையெழுத்து போட்டுவிட்டு சென்றுள்ளார். திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் நடத்திய விசாரணையில், எழுத்தரை ஏமாற்றி கையெழுத்து போட்டு சென்றதை கண்டுபிடித்தார். காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதில், ரசூல் இருவருக்கும் கையெழுத்து போட்டது பதிவாகி இருந்தது. ரசூலை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.