கடன் பெற்று தருவதாக ஏமாற்றி ரூ.15 லட்சம் சுருட்டியவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2018
00:59

அம்பத்துார் : தனியார் நிதி நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி, 15 லட்சம் ரூபாய் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.


சென்னை, பெரவள்ளூர் அடுத்த பெரியார் நகர், 18வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் குமார், 40. இவர், இ.சி.ஆர்., வெங்கம்பாக்கத்தில், குடிநீர் உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையின் மேம்பாட்டிற்கு, 25 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அவரிடம், 15 லட்சம் ரூபாய் மட்டும் இருந்தது. தனக்கு தேவைப்பட்ட, 10 லட்சம் ரூபாயை, கடன் வாங்க முடிவு செய்தார். அதற்காக, கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த நண்பர், லோகேஷ், 32, உதவியை நாடினார். அவர், சூரப்பட்டில் உள்ள, தனியார் நிதி நிறுவன உரிமையாளரிடம், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறினார்.


இதற்கு, 'உன்னிடம் உள்ள, 15 லட்சம் ரூபாயை, அவரிடம் காட்டினால் தான், நமக்கு தேவையான பணத்தை கொடுப்பார்,' என்று, லோகேஷ் கூறியிருக்கிறார். அதை நம்பி, கடந்த, 5ம் தேதி மாலை, 7:00 மணி அளவில், குமார் பணத்துடன், லோகேஷை சந்தித்தார். இருவரும், லோகேஷின் இருசக்கர வாகனத்தில், சூரப்பட்டு சென்றனர். அப்போது, குமாருக்கு மொபைல்போனில் அழைப்பு வந்தது. பேசுவதற்காக வாகனத்தை நிறுத்தினார். அப்போது லோகேஷ், 'நான் வண்டி ஓட்டுகிறேன்; நீங்கள் பேசுங்கள்,' என்றார்.


குமார் வாகனத்தில் இருந்து இறங்கினார். வாகனத்தில் அமர்ந்திருந்த லோகேஷ், சாலையோரம் நின்று, குமார் போன் பேசிய நேரத்தில், வாகனத்தில் வைத்திருந்த பணத்துடன் பறந்தார். சில நிமிடத்திற்கு பின், பணத்துடன் லோகேஷ் மாயமானதால், அதிர்ச்சியடைந்த குமார், லோகேஷின் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது, 'சுவிட்ச் ஆப்' ஆகிஇருந்தது.

இது குறித்து, அம்பத்துார் போலீசில், குமார் புகார் செய்தார். ஆனால், உரிய நடவடிக்கை இல்லை.


அதிருப்தி அடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார் துணை கமிஷனர், சர்வேஷ்ராஜிடம் புகார் செய்தார். அம்பத்துார் போலீசார் விசாரணையில் இறங்கினர். பணத்துடன் தப்பிய லோகேஷ், நேற்று முன்தினம், மதுராந்தகத்தில் உள்ள நண்பர் வீட்டில் இருந்ததும் தெரியவந்தது.போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், லோகேஷ், திருப்பதியில் எல்.எல்.பி., படித்தவர் என்றும், குமாரிடம் பறித்த, 15 லட்சம் ரூபாயில், 4 லட்சம் ரூபாய்க்கு, புதிய கார் வாங்கியிருந்ததும் தெரியவந்தது. மீத பணம், 11 லட்சம் ரூபாய், புதிய கார் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X