இரு தாசில்தார்கள், 'டிஷ்யூம்... டிஷ்யூம்!' கலவரமானது பல்லாவரம் தாலுகா ஆபீஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2018
00:59

குரோம்பேட்டை : நண்பருக்கு வாரிசு சான்றிதழ் வாங்க வந்த, வேளச்சேரி தனி தாசில்தாரும், பல்லாவரம் தாசில்தாரும், பல்லாவரம் தாலுகா அலுவலகத்திலேயே, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பல்லாவரம் நகராட்சி அலுவலக வளாகத்தில், பல்லாவரம் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு, வில்பிரட் கிச்சிங், 56, என்பவர் தாசில்தாராக உள்ளார். குரோம்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர், குமரன், 52; வேளச்சேரி தாலுகாவில், நகர நில வரி திட்ட, தனி தாசில்தாராக உள்ளார். நேற்று காலை, 10:30 மணிக்கு, குமரன் தன் மனைவியுடன், பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.


தாசில்தார் வில்பிரட் கிச்சிங் அறைக்கு சென்ற குமரன், தன் நண்பர், வாரிசு சான்றிதழ் வாங்க, இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருப்பதாகவும், எதற்காக அவரை அலைய வைக்கிறீர்கள் என்றும் கேட்டார்.அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், 'சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர் வரட்டும்; அவரிடம் பதில் சொல்கிறேன். நீங்கள் சொல்வதால், சான்றிதழ் தர முடியாது' என்று, வில்பிரட் கிச்சிங் கூறியுள்ளார்.


இந்த வாதத்தில், திடீரென, தாசில்தார்கள் இருவரும், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு, அலுவலக ஊழியர்கள் ஓடிச் சென்று, இருவரையும் விலக்கினர்.

வில்பிரட் கிச்சிங்கிற்கு ஆதரவாக களம் இறங்கிய, பல்லாவரம் தாலுகா அலுவலக ஊழியர்கள், தாசில்தார் குமரனை, வெளியே செல்லாதவாறு அலுவலகத்திற்குள் முடக்கினர்.


மேலும், சம்பவத்தை கேள்விப்பட்டு, காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள, வருவாய் துறை ஊழியர்கள், பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்தனர்.இதற்கிடையே, குமரன் அளித்த தகவலின் படி, சென்னை மாவட்ட வருவாய் துறை ஊழியர்கள், அவருக்கு ஆதரவாக, பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.வில்பிரட் கிச்சிங், குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். குமரன், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.


தாலுகா அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியதால், பரங்கிமலை துணை கமிஷனர், முத்துசாமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர், சந்திர சேகரன், இருவரிடமும் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக, இருவரும் போலீசில் புகார் செய்யவில்லை. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சி, இரு தரப்பிலும் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், நேற்று பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் எந்த பணியும் நடக்காமல், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.