போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 மார்
2018
01:17

மெடிக்கல் கடையில் ரூ.1.60 லட்சம் திருட்டு:


மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர், திருப்பதி, 42; அதே பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில், கல்லாவில் வைத்திருந்த, 1.60 லட்சம் ரூபாய் திருடு போனதும் தெரியவந்தது. அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



ரூ.3 லட்சம் மதிப்பு மொபைல்கள் திருட்டு:


மந்தவெளி, ஆர்.கே.மடம் சாலையைச் சேர்ந்தவர், பிரதீப் குமார், 46; அதே பகுதியில் மொபைல் விற்பனை கடை நடத்தி வருகிறார்.பிரதீப் குமார், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



சார்ஜ் போட்ட மொபைலால் தீ பிடித்த வீடு:


வளசரவாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பாலாஜி, 42. நேற்று முன்தினம் இரவு, இவரது மனைவி, இரு மகன்கள், வீட்டை பூட்டி, கடைக்கு சென்றனர். அப்போது, அவரது வீட்டில் இருந்து, புகை வந்துள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி வந்த தீயணைப்பு படை வீரர்கள், சில மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. மதுரவாயல் போலீசாரின் விசாரணையில், சார்ஜரில் இருந்த மொபைல் போனில் ஏற்பட்ட மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.



சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி:


திருநீர்மலை, அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர், பெரியகருப்பன், 60. அவர் நேற்று முன்தினம், திருநீர்மலை சாலையில் நடந்து சென்ற போது, லாரி ஒன்று மோதியது. அதில் காயமடைந்த பெரியகருப்பன், சம்பவ இடத்திலேயே பலியானார்.குரோம்பேட்டை போலீசார், லாரி ஓட்டுனர், சேட்டு, 48, என்பவரை கைது செய்தனர். குரோம்பேட்டை, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர், சுப்ரமணி, 63. அவர், குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மேம்பாலம் அருகேயுள்ள, ஜி.எஸ்.டி., சாலையை, நேற்று காலை கடக்க முயன்றார். அவ்வழியாக சென்ற கார் மோதியதில், தலையில் காயமடைந்த சுப்ரமணி, பலியானார். போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த, ஓட்டுனர், மோகன்ராஜ், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.



ரயிலில், 'லேப் டாப்' திருடியவர் கைது:


மூர்மார்க்கெட் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து, ரயில்வே போலீசார் விசாரித்தனர்.அதில், திருவள்ளூர் மாவட்டம், ஈக்காட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பதும், ரயில்களில் பயணியரின் உடைமைகளை திருடி வந்ததும் தெரிந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஐந்து, 'லேப்டாப்'கள், பறிமுதல் செய்தனர்.



மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது:


சிந்தாதிரிப்பேட்டை, அம்மா நகரில், நேற்று முன்தினம், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த, பாலாஜி, 50, என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



பைக் திருடிய வாலிபர் கைது:


வடபழனி, தேசிகர் தெருவைச் சேர்ந்தவர், விக்னேஷ், 24. இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த, விக்னேஷின் இருசக்கர வாகனம், 5ம் தேதி திருடு போனது. இது குறித்து விசாரித்த வடபழனி போலீசார், தசரதபுரத்தைச் சேர்ந்த முத்து, 33, என்பவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இவர், விக்னேஷின் பெரியப்பா மகன் என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.



பெண் துாக்கிட்டு தற்கொலை:


குரோம்பேட்டை, நாகல்கேணியைச் சேர்ந்தவர், வடிவுக்கரசி, 35; சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு இறந்தது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.



பெண்ணிடம் ௮ சவரன் செயின் பறிப்பு:


பட்டாபிராம், சார்லஸ் நகரைச் சேர்ந்தவர், சரோஜா, 45. இவர், நேற்று முன்தினம் இரவு, தான் வசிக்கும், அவ்வையார் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது, 8 சவரன் செயினை பறித்து தப்பினர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.



ஒரு நம்பர் லாட்டரி விற்ற நால்வர் கைது:


விருகம்பாக்கத்தில், ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அபுசாலி தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு, ஆட்டோவில், ஒரு நம்பர் லாட்டரி விற்ற, போரூரைச் சேர்ந்த அக்பர், 42, நடராஜன், 44, உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.



லாரி மோதியதில் ஒருவர் பலி:


மடிப்பாக்கம், மயிலை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர், ராமசாமி, 31; தனியார் நிறுவன ஊழியர்.இவர், நேற்று காலை, சதீஸ், 21, என்பவருடன், இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றார். சுண்ணாம்பு கொளத்துார் பகுதியில் சென்ற போது, குடிநீர் லாரி மோதி விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கி, ராமசாமி பலியானார். காயமடைந்த சதீஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிமலை போலீசார், லாரி ஓட்டுனரான, நந்தனத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவரை கைது செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X