மக்களை தேடி தபால் துறை:3 மாதத்தில் 9,000 கணக்குகள் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2018
05:36

பம்மல்;சாதாரண மக்களும் பயனடையும் நோக்கில், 'மக்களை நோக்கி தபால் துறை' என்ற திட்டம் மூலம், ஒவ்வொரு பகுதியாக முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம், மூன்று மாதங்களில், 9,000 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்க, ஏகப்பட்ட கெடுபிடி இருப்பதால், சாதாரண மக்கள், வங்கி கணக்கு துவங்க தயக்கம் காட்டுகின்றனர். தபால் துறையில் சாதாரண மக்கள், பயனடையும் வகையில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அத்திட்டம் குறித்து, பலருக்கு தெரியவில்லை. இதனால், மக்கள் பயனடையும் வகையில், 'மக்களை நோக்கி தபால் துறை' என்ற திட்டம், புறநகர் பகுதிகளில், மூன்று மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தபால் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பகுதியாக சென்று, முகாம் அமைத்து, தபால் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கி, மக்களை, சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் இணைத்து வருகின்றனர்.அந்த வகையில், பம்மல் நகராட்சி, அம்பேத்கர் நகரில், நேற்று முகாம் நடந்தது.

தோல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில், பலர் விபரங்களை கேட்டு, கணக்கு துவக்கினர்.


அதிகாரிகள் கூறியதாவது:மக்களின் வசதிக்காக சேமிப்பு கணக்கு, செல்வ மகள் சேமிப்பு, பொன்மகன் வைப்பு திட்டம், முதியோர் சேமிப்பு, காப்பீடு, வருமான வரிச்சலுவை பெற தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. சேமிப்பு கணக்கு துவக்க, 50 ரூபாய், ஆதார் கார்டு ஜெராக்ஸ், இரண்டு புகைப்படங்கள் மட்டும் போதும்; உடனடியாக கணக்கு துவக்கப்படும்.

மூன்று மாதங்களில், தாம்பரம், படப்பை, வண்டலுார், மண்ணிவாக்கம், காமராஜபுரம், குரோம்பேட்டை, ராதா நகர், சிட்லபாக்கம், மாடப்பாக்கம் ஆகிய பகுதிகளில், முகாம் நடத்தப்பட்டு, 9,000 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.


தபால் துறையில் பொதுமக்களின் வசதிக்காக, அடுத்த மாதம் முதல், ஐ.பி.பி.பி என்ற, பணம் செலுத்தும் வங்கி திட்டம் துவக்கப்பட உள்ளது. இதில், நிரந்தர வைப்பாக, ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். தமிழகத்தில், 65 அலுவலகங்களில், இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X