சைக்கிள் பாதையுடன் 6 வழி பாலம்:இறுதி கட்டத்தில் கட்டுமான பணி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2018
05:39

சென்னை;நந்தம்பாக்கத்தில், தனி சைக்கிள் பாதையுடன் கட்டப்படும், ஆறு வழி பாலம், இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நந்தம்பாக்கத்தில், அடையாறு ஆற்றின் மேல், 1930ல், இருவழி பாலம் கட்டப்பட்டது.

இதையடுத்து, 57 ஆண்டுகளுக்குப் பின், 1987ல், நடைபாதை வசதியுடன், 60 அடி அகலத்தில், நான்கு வழி பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.


தற்போது, வாகன எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து உள்ளதால், இந்த நான்கு வழி பாலத்தை, ஆறு வழி பாலமாக மாற்ற, தமிழக அரசு, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. 2017 ஜனவரியில், பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆர்.எஸ்., என்ற கட்டுமான நிறுவனம், பணியை செய்து வருகிறது. பழைய பாலத்தை ஒட்டி, 40 அடி அகலத்தில், புதிய பாலம் கட்டப்படுகிறது. பழைய பாலத்தின் பில்லர், புதிய பாலம் கட்ட இடையூறாக இருந்ததால், பாலத்தின் வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்த பின், பாலம் மைய தடுப்பு நகர்த்தி வைக்கப்பட உள்ளன.


பாலத்தின் இரண்டு பக்கத்திலும், 6 அடி அகலத்தில் நடைபாதை மற்றும், 7 அடி அகலத்தில், சைக்கிளில் செல்வதற்கான தனி பாதை ஒதுக்கப்படுகிறது.தற்போது, 95 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த மாத இறுதிக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.அடுத்த மாதம், பாலம் பயன்பாட்டுக்கு விடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.