தென் மாவட்டங்களில் பாதுகாப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2018
05:45

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நிருபர்களிடம் வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் கூறியதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், 10 மாவட்டங்களில், மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 8.82 மி.மீ., மழை பெய்துஉள்ளது.

கன்னியாகுமரியில், ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு, 553 படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். புயல் எச்சரிக்கை தகவல் கிடைத்து, 502 படகுகள் கரை திரும்பின. ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன் பிடிக்க சென்ற, 15 படகுகளும், துாத்துக்குடி மாவட்டத்தில், மீன் பிடிக்க சென்ற, 135 படகுகளும் கரை திரும்பின.


ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு சென்ற படகுகளில், 30 படகுகள், கர்நாடக கடல் பகுதியிலும், ஐந்து படகுகள், கோவா கடல் பகுதியிலும், 16 படகுகள், லட்சத்தீவு பகுதியிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது; அவர்களை மீட்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும், 10 முதல், 15 மீனவர்கள் இருக்கின்றனர். விரைவில், அவர்கள் கரை திரும்பி விடுவர்.

ஒவ்வொரு மணித்துளியும், காற்றழுத்த தாழ்வுநிலை நகர்வை, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில், வருவாய் நிர்வாகத் துறை கமிஷனரும், பேரிடர் மேலாண்மை இயக்குனரும் கண்காணித்து வருகின்றனர். தென் மாவட்டங்களில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


3 நாளாக நிற்கும் கப்பல்கள்


புயல் எச்சரிக்கை எதிரொலியால், ரயில் துாக்கு பாலத்தை திறக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், பாலத்தை கடந்து செல்ல முடியாமல், மூன்றாவது நாளான நேற்றும், இரு கப்பல்களும், பாம்பன் குந்துகால் கடற்கரையில் காத்திருக்கின்றன.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.