பராமரிப்பில்லாத வாகனங்களை அகற்ற 15 நாள் கெடு:சென்னை மாநகராட்சி கிடுக்கிப்பிடி உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2018
05:46

சென்னை;மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள், உபயோகமற்ற பழுதடைந்த வாகனங்களை, சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் ஆகியவற்றில் நிறுத்தி வைத்துள்ளனர்.


இதனால், பொதுமக்களுக்கு இடையூறும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களில், மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், பொது சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது என, புகார்கள் எழுகின்றன.அதை தடுக்கும் வகையில், சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள், இன்றில் இருந்து, 15 நாட்களில் அப்புறப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றப்படாத வாகனங்களை, சென்னை மாநகராட்சி, மாநகர காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தும்.


இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு, வட்டார வாரியாக ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில், அகற்றப்படும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

வடக்கு வட்டாரத்தில், சூளை அவதான பாப்பையா தெருவில், மலேரியா ஸ்டோர் அருகில் அமைந்துள்ள, மாநகராட்சி இடத்தில், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

மத்திய வட்டாரத்தில், மேயர் சத்திய மூர்த்தி சாலை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை அருகில் உள்ள, மத்திய தார் கலவை நிலைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தப்படும்.

தெற்று வட்டாரத்தில், வேளச்சேரி - தாம்பரம் சாலையில் அமைந்துள்ள, பள்ளிக்கரணை பழைய குப்பை கொட்டும் வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தப்படும்.

அனைத்து வாகனங்களும், பின், ஏலம் விடப்படும். இதை தவிர்க்க, பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைத்துள்ள, உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை, தாங்களாகவே முன்வந்து, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சாலை, நடைபாதை, உட்புற தெருக்களில் உள்ள, பராமரிப்பில்லாத வாகனங்களை அகற்ற, மாநகராட்சி கெடு விதித்துள்ளது.

ஆனால், நகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில், வழக்கு வாகனங்கள், சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக மக்கி கிடக்கின்றன. இந்த வாகனங்களையும், மாநகராட்சி ஏலம் விடுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.