போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2018
00:56

கள்ளச்சாவியால் வீட்டை திறந்து கொள்ளை:



தி.நகர், மங்கேஷ் தெருவைச் சேர்ந்தவர், சந்தான கோபாலன், 52. இவர், நேற்று முன்தினம், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பின், மாலை வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த, இரண்டு லட்சம் ரூபாய் திருடு போனதும் தெரியவந்தது.வழக்கு பதிந்த மாம்பலம் போலீசார் விசாரணையில், கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து, பணத்தை திருடியது தெரியவந்தது. மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.



வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு:


விருகம்பாக்கம், சேக் அப்துல்லா நகரைச் சேர்ந்தவர், அருள், 34; வடபழனியில் உள்ள, தனியார் நட்சத்திர உணவகத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம், மனைவியுடன் வெளியே சென்ற அவர், மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த, 5 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



ஓட்டுனரை பாட்டிலால் குத்திய 2 பேர் கைது:


ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், ராஜேந்திரன், 45; ஓட்டுனர். இவரது பக்கத்து

வீட்டைச் சேர்ந்தவர்கள், பழனியம்மாள், 42, ஆனந்தராஜ், 22. இந்த இரு தரப்பினருக்கும் இடையே, வீட்டிற்கு முன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, தகராறு இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில், ஆனந்தராஜ், பழனியம்மாள் ஆகியோர்,

ராஜேந்திரனை பாட்டிலால் குத்தினர். காயமடைந்த ராஜேந்திரன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆதம்பாக்கம் போலீசார், பழனியம்மாள், ஆனந்தராஜை, நேற்று கைது செய்தனர்.



வாகன பேட்டரி திருடிய நபர் கைது:


மதுரவாயல் காவல் நிலையம் அருகே, போலீசார் நேற்று முன்தினம், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'லோடு' ஆட்டோவை நிறுத்தினர். அதில், ஐந்து கார் பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது.

ஓட்டுனரிடம் விசாரித்ததில், தி.நகரைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பதும், கார்களில் பேட்டரியை திருடி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 5 சவரன் நகை, 5 பேட்டரிகள் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.



குத்துவிளக்குகளை திருடியவர் கைது:


தண்டையார்பேட்டை, டி.எச்.சாலையில், நேற்று அதிகாலை, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருட்டில் நின்றிருந்த ஒருவர், குத்து விளக்குகளை, சுத்தியால் உடைத்து கொண்டிருப்பதை பார்த்தனர்.

அவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ், 28, என்பதும், குத்துவிளக்குகளை திருடி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, ஆறு குத்துவிளக்குகளை பறிமுதல் செய்தனர்.



பெண் துாக்கிட்டு தற்கொலை:


செம்பாக்கம், காமராஜபுரம், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர், வடிவேலு, 56; பெயின்டர். அவரது மனைவி கோமதி, 46. இவர்களுக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த கோமதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



வியாபாரிகள் கடத்தலில் மேலும் ஒருவர் கைது:


ராமநாதபுரம், பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்த, குரைஸ், சுக்கூர் உள்ளிட்ட ஐந்து பேரை, 3ம் தேதி, சென்னை, ஆலந்துார், ஆசர்கானா பேருந்து நிறுத்தம் அருகே, காரில் வந்த, ஆறு பேர்,

துப்பாக்கி முனையில் கடத்தினர்.

பரங்கிமலை போலீசார், 10ம் தேதி, திருச்சியைச் சேர்ந்த சரவணன், அருண்குமார், அக்பர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த, கேளம்பாக்கத்தை சேர்ந்த நைனா முகமது, 34, என்பவனை, நேற்று கைது செய்தனர். மேலும், ஜக்காரியா, ராஜா

மற்றும் காஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.



தபால் நிலைய ஊழியர்கள் கைது:


ஓ.எம்.ஆர்., சாலை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், சிவிகுமார், 25. தாம்பரம், அகரம்தென் பகுதியைச் சேர்ந்தவர், முருகன், 23. இவர்கள், பரங்கிமலை தபால் நிலையத்தில், தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்தனர்.

தபால்களை பிரிப்பது, பார்சல்களை, இதர தபால் நிலையங்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளில், இவர்கள் ஈடுபட்டனர். இந்த தபால் நிலையத்திற்கு, பார்சலில் வரும் மொபைல் போன்களை, நண்பர்கள் முகவரிக்கு அனுப்பி, மோசடி செய்து வந்துள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து, மொபைல் போன்கள் வராதது குறித்து, 25க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவானது. பதிவு மற்றும் பார்சல் முகவரியை, அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்தனர். இதில், தற்காலிக ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின்படி, பரங்கிமலை போலீசார், சிவிகுமார் மற்றும் முருகனை, நேற்று கைது செய்தனர்.



பூட்டை உடைத்து 15 சவரன் திருட்டு:


அம்பத்துார், சாமுராய் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர், அர்ஜுனன், 57. அவரது மனைவி ரோஜா. இருவரும், அம்பத்துாரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்கின்றனர்.

இருவரும் நேற்று காலை வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவர்களது மகன் பாலாஜி, பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 15 சவரன் நகை, 65 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.



வயதான தம்பதியிடம் நகை, பணம் திருட்டு:


வேலுார் மாவட்டம், பசுமாத்துாரைச் சேர்ந்தவர், நடராஜன், 78; ஓய்வு பெற்ற ஆசிரியர். அவர், குரோம்பேட்டையில் பணிபுரியும் தன் மகனை பார்ப்பதற்காக, மனைவியுடன் சென்னை வந்தார்.

நேற்று காலை, மீண்டும் வேலுார் செல்வதற்காக, சானடோரியம் பேருந்து நிலையம் சென்றார். அங்கு நின்றிருந்த வேலுார் செல்லும் பேருந்தில் ஏறிய அவர்கள், காலருகே இரண்டு பைகளை வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, காலுக்கு அருகே வைத்திருந்த பை மாயமானது தெரியவந்தது. அதில், 15 சவரன் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தனர். தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X