போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2018
02:23

உதிரிபாகம் திருடிய ஊழியர் கைது

சூலுார் அடுத்த நாகமநாயக்கன்பாளையத்தில், 'போர்வெல் பம்ப்' விற்பனை செய்யும் நிறுவன அறையில், 'பம்ப்' மற்றும் உதிரிபாகங்கள், சில தினங்களுக்கு முன் திருட்டு போயின. மேலாளர் அழகப்பன் கொடுத்த புகாரின் பேரில், சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்தையாவிடம், சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, 2.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்களை, திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து

பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.



மின்சார ஒயர் திருடிய இருவர் கைது

காரமடை பெள்ளாதி ராகவேந்திரா காலனி அருகே, நாகராஜ், 28 என்பவருக்கு சொந்தமான, விவசாய கிணறு உள்ளது. இவர் நேற்று கிணற்றுக்கு சென்ற போது, மின்மோட்டாருக்கு செல்லும் ஒயர்கள், துண்டிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் நின்றிருந்த இருவரை விசாரித்ததில், மின்சார ஒயர்களை திருடியது அவர்கள்தான் என தெரியவந்தது.

அவர்களை நாகராஜ், காரமடை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பிடிபட்ட இருவரும், காரமடை சின்னக்கண்டியூரை சேர்ந்த சின்ராஜ், 24, பெரிய கண்டியூரை சேர்ந்த முரளி, 22 என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.



சேவல் சண்டை நடத்திய நான்கு பேர் கைது


சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுாரில், சேவல் சண்டை நடப்பதாக, சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி முள் காட்டில், சேவல் சண்டை நடத்திய ராசிபாளையத்தை சேர்ந்த சத்தியராஜ், 32 காமாட்சிபுரத்தை சேர்ந்த முருகேசன், 42. பெருமாள் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X