போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மார்
2018
00:56

ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.4 லட்சம் வழிப்பறி

வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர், வேலு, 34; இரும்பு கழிவுகள் வாங்கி விற்கும் வியாபாரி.

கொடுங்கையூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர், அருண், 28; சரக்கு ஆட்டோ ஓட்டுனர். அவரிடம், நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், இரும்பு கழிவுகள் வாங்குவதற்காக, 4 லட்சம் ரூபாயை, வேலு கொடுத்தார்.பணப்பையை சரக்கு ஆட்டோவில் வைத்து, மாதவரம் நெடுஞ்சாலை வழியாக சைதாப்பேட்டைக்கு, அருண் சென்று கொண்டிருந்தார். மாதவரம், பொன்னியம்மன்மேடு அருகே, மூன்று, இருசக்கர வாகனத்தில் வந்த, ஆறு பேர், அருணின் வாகனத்தை வழி மறித்தனர்.

'வாகனத்தின் மீது மோதி, நிற்காமல் செல்கிறாயா' என, அருணிடம் தகராறு செய்த கும்பல், சில நிமிடத்திற்கு பின் அங்கிருந்து சென்றது. அப்போது, ஆட்டோவில் வைத்திருந்த, நான்கு லட்சம் ரூபாய் காணாமல் போனது, அருணுக்கு தெரியவந்தது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



நகை பறித்த பெண் கைது:


பல்லாவரத்தை அடுத்த பம்மல், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர், பானுமதி, 53. அவர், நேற்று மதியம், 12:30 மணிக்கு, வீட்டு மாடியில் துணி காய வைத்து கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டினுள் நுழைந்த பெண், வெள்ளி பொருட்களை திருட முயற்சித்துள்ளார். சத்தம் கேட்டு கீழே வந்த பானுமதியை தாக்கிய அந்த பெண், 10 சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். பானு

மதியின் அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை மடக்கி பிடித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மேகலா, 47, என்பது தெரியவந்து. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.



கார் பேட்டரி திருடிய இருவர் கைது:


அனகாபுத்துார் அணுகு சாலையில், சங்கர் நகர் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஆட்டோவில், இரண்டு பேர் இருந்தனர். போலீசார், ஆட்டோவை ஆய்வு செய்ததில், ஏராளமான கார் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோவில் இருந்த இருவரிடம் விசாரித்தனர்.

அதில், அனகாபுத்துாரைச் சேர்ந்த வீரமணி, 21, சிவகுமார், 22, என்பதும், கார் பேட்டரிகளை திருடி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டோ மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.



164 மதுபாட்டில்கள் பறிமுதல்:


புளியந்தோப்பு, பட்டாளத்தைச் சேர்ந்தவர், கன்னியம்மாள், 47. அவர், நேற்று காலை, 10:00 மணியளவில், கே.எம்.கார்டன் பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 164 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



ரவுடியை வெட்டிய மூன்று பேர் கைது:


கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர், ரவி, 23. இவர் மீது திருட்டு, வழிப்பறி, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணியளவில், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த, சில வாலிபர்களுக்கும், ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வாலிபர்கள், ரவியின் கையை அரிவாளால் வெட்டி தப்பினர்.

கொடுங்கையூர் போலீசார், ரவியை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வெட்டிய வாலிபர்களை பிடிக்க முயன்ற போது, அப்பகுதி பெண்கள் தடுத்து, அவர்களை தப்ப வைத்தனர். இதனால், ஐந்து பெண்கள், நேற்று முன்தினம் கைதாகினர். இந்நிலையில் நேற்று, சாமுவேல், 20, சாலமன், 24, ரமேஷ், 42, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள, நால்வரை தேடி வருகின்றனர்.



கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது:


காரப்பாக்கம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர், அசோக், 27; மென் பொறியாளர். அவர், நேற்று காலை பணிக்கு சென்று, மதியம் வீடு திரும்பினார். அப்போது, பூட்டை உடைத்த இரண்டு பேர்,

வீட்டினுள் இருப்பது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இரண்டு பேரையும் பிடித்த அசோக், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், கவுதம் கார்த்திகேயன், 26, மணிகண்டன், 24, ஆகியோரை கைது செய்தனர்.



பானிபூரி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு:


செங்குன்றம் அடுத்த தீயம்பாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு, பீஹாரைச் சேர்ந்த விபின் யாஷின், 24, என்பவர், தள்ளுவண்டியில், பானிபூரி விற்பனை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்ற இரண்டு பேர், பானிபூரி சாப்பிட்டுள்ளனர். விபின் யாஷின் பணம் கேட்டதால், தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின், ஆத்திரமடைந்த அவர்கள், அரிவாளால் விபின் யாஷின் கையில் வெட்டி தப்பினர். காயமடைந்த அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்த செங்குன்றம் போலீசார், விசாரிக்கின்றனர்.



சரக்கு ஆட்டோவை திருடிய 4 பேர் கைது:


ராயப்பேட்டை, அம்மையப்பன் தெருவைச் சேர்ந்தவர், பழனிவேல், 30; சரக்கு ஆட்டோ ஓட்டுனர். அவர், 10ம் தேதி இரவு, வீட்டிற்கு வெளியே, சரக்கு ஆட்டோவை நிறுத்தி சென்றார். மறுநாள் காலை, ஆட்டோ காணாமல் போனது தெரியவந்தது. ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று, ஜெகதீசன், 21, சதீஷ், 30, தனசிங், 24, சதீஷ், 30, ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.



ரூ.2 லட்சம் போதை பாக்கு பறிமுதல்:


சிவகாசியை சேர்ந்தவர்கள், கண்மணி, 28, வசந்தகுமார், 30. இருவரும், சென்னை புழல், புதிய லட்சுமிபுரம், சாரதி நகர், 4வது தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டில் குட்கா, போதை பாக்குகள் பதுக்கி வைத்திருப்பதாக புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று, அந்த வீட்டில் சோதனை செய்தனர். அங்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, குட்கா உள்ளிட்ட போதை பாக்குகள் சிக்கின. இதையடுத்து போதை பாக்குகள், காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X