ரூ.3,279 கோடி கடனா, மானியமா? : மின் வாரிய குழு இன்று ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
00:35

திருத்திய மின் திட்ட பணிகளை முடிக்காததால், மத்திய அரசு ஒதுக்கிய, 3,279 கோடி ரூபாய் நிதி, கடனாக மாறியுள்ள நிலையில், அது தொடர்பாக, மின் வாரிய உயர்மட்ட குழு, இன்று ஆய்வு நடத்த உள்ளது.


காலக்கெடு நிர்ணயம் : நகரங்களில், சீராக மின்சாரம் சப்ளை செய்வதற்காக, திருத்திய மின் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்ட பணி, தமிழகத்தில், 110 நகரங்களில், 2009ல் துவங்கியது. இது, இரு பிரிவுகளை உள்ளடக்கியது. புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட, இரண்டாவது பிரிவு பணிகளுக்காக, மத்திய அரசு, 3,279 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த நிதி, பணிகளை முடிப்பதற்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து விட்டால், அந்த நிதியில், பாதியை செலுத்தினால் போதும். இல்லையெனில், மொத்தத்தையும், வட்டியுடன் கடனாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், பணிகளை முடிக்க, 2012ல் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியாக, 2018 மார்ச் வரை, அவகாசம் வழங்கப்பட்டது. அந்த காலக்கெடுவும் முடிந்த நிலையில், சில நகரங்களில், மின் வாரியம், பணிகளை முடிக்கவில்லை என, தெரிகிறது.

இதனால், மத்திய அரசு ஒதுக்கிய நிதி, கடனாக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அந்த பிரிவு பொறியாளர்களிடம், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் வாரிய தலைவர், விக்ரம் கபூர், இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதில், மின் துறை அமைச்சர், தங்கமணியும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.


மின் சப்ளை : இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர், நேற்று கூறியதாவது:

திருத்திய மின் திட்டம் தொடர்பாக, மத்திய மின்துறை அதிகாரிகளிடம் ஆலோசிக்க, சிலர் டில்லி சென்றுள்ளனர். மத்திய அரசு, பணிகளை முடிக்க, அடுத்த மாதம் வரை அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்குள் பணிகள் முடிக்கப்படுமா, ஒதுக்கிய நிதி கடனாக மாறுமா என்பது தொடர்பாக, உயரதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உள்ளது. அத்துடன், கோடை கால மின் சப்ளை குறித்தும், அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.