போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
01:11

கொலை வழக்கில் ஒருவர் கைது

கம்பம்: கம்பம் உலகத்தேவர் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் 37; கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தன்னுடன் இருந்த நண்பரை கிண்டல் செய்துள்ளார்.

அருகில் இருந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொன் னர் ,30, என்பவர் கண்டித்துள்ளார். அதற்கு அவ ரின் குடும்பத்தை அவதுாறாக பேசியுள்ளார். ஆத் திரமடைந்த பொன்னர், அரிவாளால் மகேந்திரனை வெட்டியுள்ளார். அதே இடத்தில் அவர் பலியானார். டி.எஸ்.பி., சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரித்தனர். இரவோடு இரவாக பொன்னரை கைது செய்தனர்.



தற்கொலை

பெரியகுளம்: கைலாசபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 35. வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். மனவேதனையில் மாந்தோப்பில் விஷம் குடித்தவர் பலியா னார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

* கூடலுார் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன்,28. இவர் ஏப். 12 ல் தேனி - மதுரை ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.



ஐந்து பேர் மீது வழக்கு

தேனி என்.ஆர்.டி., நகரை சேர்ந்தவர் முத்துரங்கநாகுவிஜயன். இவரது மனைவி பானுபிரியா. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வசிக்கின்றனர். பானுபிரியா, தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க சென்றபோது கணவர், உறவினர்கள் தாக்கினர். தேனி போலீசார் முத்துரங்கநாகுவிஜயன், உறவினர் சண்முகவிஜயகுமாரி, சுகந்தியா, நவநீதகிருஷ்ணன், முத்துராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.



தாக்கியவர் கைது

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வினோத்கோபி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. மதுபோதையில் வந்த விஷ்ணுவர்தன், வினோத்கோபியை தாக்கினார். பழனிசெட்டிபட்டி போலீசார் விஷ்ணுவர்தனை கைது செய்தனர்.



மதுவிற்ற ஐவர் கைது

உப்புகோட்டை சின்னன்,46, லட்சுமிபுரம் செல்லச்சாமி,45, கோட்டூர் காமாட்சி,53, தங்கராஜ்,51, பாலார்பட்டி கணேசன்,40 ,ஆகியோர் பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தனர். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஐவரையும் கைது செய்தனர். 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



நால்வர் கைது

தேனி: சோலைதேவன்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாதேவி. இவர்களுக்கும் அதேபகுதியை சேர்ந்த சென்றாயன் மனைவி ஜெயராணிக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்றுமுன்தினம் மீண்டும்தகராறு ஏற்பட்டது. இருதரப்பு புகாரில் வீரபாண்டி போலீசார் ஜெயராணி, வேல்முருகனை கைது செய்தனர்.

* ேதனி அருகே கூழையனுாரை சேர்ந்த தெய்வம் மகன் விக்னேஷ்,20; உசிலம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தவரை, அதே

பகுதியை சேர்ந்த பிரிதிவிராஜ், சதீஸ், தினேஷ், விஜயகுமார், ராஜபாண்டி, அருண்பாண்டி ஆகியோர் மதுஅருந்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மறுத்ததால் தகராறு செய்தனர். வீரபாண்டி போலீசார் ராஜபாண்டி, அருண்பாண்டியை கைது செய்து, மற்ற நால்வர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X