போலீஸ் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
03:36

பஸ்சில் 18 பவுன் நகைகள் திருட்டு


மேலுார்: திருப்பத்துார் அருகே எஸ்.ஆலங்குடி சக்கரை பீர் முகமது மனைவி ரிஸ்வானாபேகம், 21. ஏப்.,12 மேலுார் அருகே கல்லம்பட்டியிலுள்ள உறவினரைபார்க்க மாமியார் அபிதாபீவியுடன் பஸ்சில் சென்றார். மேலுார் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது கைப்பையில் இருந்த 18 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிந்தது.கீழவளவு போலீசில் ரிஸ்வானாபேகம் கொடுத்த புகாரில், கீழவளவில் கைக்குழந்தையுடன் ஏறிய பெண் சில்லரை காசை சிதறவிட்டார். அவருக்கு உதவி செய்த போது நகையை திருடி சென்றார்,'' என்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.



---------சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது


அவனியாபுரம்: வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 4 வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி நேற்றுமுன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடினார். அப்போது அப்பகுதி பாண்டி, 38, சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். . அவனியாபுரம் போலீசார் விசாரித்து பாண்டியை கைது செய்தனர். கொத்தனார் வேலை செய்த பாண்டி மன நலம் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினரை பிரிந்து வாழ்வது விசாரணையில் தெரிந்தது.



----------விபத்தில் வாலிபர் பலி


திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே வில்லுார் சந்திரகுமார், 24. பொறியியல் படித்த இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து டூ வீலரில் ெஹல்மெட் அணியாமல் வில்லுார் சென்றார். திருமங்கலம் நான்கு வழிச்சாலையை கடந்த போது, கம்பி தடுப்பில் மோதி தலைக்காயமடைந்து உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



-----புது மாப்பிள்ளை பலி


திருமங்கலம்: கரிசல்பட்டி விவசாய தொழிலாளி சுரேஷ்குமார், 25. இவரும் விடத்தகுளம் பாண்டியராஜனும், 29, டூ வீலரில் கூடக்கோயில் சென்றனர். சுரேஷ்குமார் டூவீலரை ஓட்டினார்(ெஹல்மெட் அணியவில்லை). மல்லிகைநகர் பஸ்ஸ்டாப்பில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றியது. இருவரும் பஸ்சின் பின்புறம் டூ வீலரை நிறுத்தினர். அப்போது காரியாபட்டி சென்ற அரசு டவுன்பஸ் பிரேக் பிடிக்காமல் நின்ற பஸ் மீது மோதியது. இரு பஸ்களுக்கு இடையே சிக்கி பாண்டியராஜனும், சுரேஷ்குமாரும் பலத்த காயமுற்றனர். மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பாண்டியராஜன் இறந்தார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சுரேஷ்குமார் பலத்த காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். கூடக்கோயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X