போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
01:28

ரயிலில் 45 சவரன் மாயம்

எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர், செலின்மேரி, 54. கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு, நேற்று முன்தினம், மின்சார ரயிலில் பயணித்தார். அப்போது, 45 சவரன் நகை வைத்திருந்த பை காணாமல் போனது. எழும்பூர் ரயில்வே போலீசார், விசாரித்து வருகின்றனர்.



32 சவரன் நகை திருட்டு:


மயிலாப்பூர், டாக்டர் ரங்கா சாலையைச் சேர்ந்தவர், ஜானகி, 74. அவர், 17ம் தேதி, கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை, ஜானகியின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 32 சவரன் நகை மற்றும், 50 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



இருவரை வெட்டிய ஐவர் கைது:


செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் ஊராட்சி மன்றம் அருகே, 17ம் தேதி, போதையில் இருந்த, ஏழு பேர் கொண்ட கும்பல் மோதிக் கொண்டது. அதில், மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., மகன் சந்தோஷ், 24, அவரது நண்பர் கார்த்திக், 22, ஆகியோருக்கு, அரிவாள் வெட்டு விழுந்தது.

செங்குன்றம் போலீசார், காயமடைந்தோரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். செங்குன்றம் போலீசார், நல்லுாரைச் சேர்ந்த நமச்சிவாயம், 23, இஸ்மாயில், 21, உள்ளிட்ட, ஐந்து பேரை கைது செய்தனர்.விசாரணையில், பாடியநல்லுாரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வோரிடம், மிரட்டி வாங்கிய மாமூலை, பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மோதல் நடந்தது தெரியவந்தது.



மூன்று வீடுகளில் திருட்டு:


தண்டையார்பேட்டை, கப்பல்போலு தெருவைச் சேர்ந்தவர், சரவணன், 36. அவர், நேற்றிரவு, காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த சிறுவன், 1 சவரன் நகை மற்றும் ஒரு மொபைல்போன் திருடிச் சென்றான்.

அடுத்துள்ள கோமதி, 40, என்பவரின் வீட்டில், 7,000 ரூபாய், ஒரு மொபைல்போன் திருடப்பட்டு உள்ளது. பின், மார்க்கண்டேயன், 65, என்பவரின் வீட்டில், மொபைல்போனை சிறுவன் திருடிய போது, அவர் பார்த்து பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், சிறுவன் தப்பினான். தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.



67 மொபைல் போன்கள் பறிமுதல்:


பாரிமுனை, ராஜாஜி சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரிடம், போலீசார் விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

அவரது பையை ஆய்வு செய்ததில், 10க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் இருந்தன. விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த பிரின்சஸ், 32, என்பதும், பயணியரிடம் மொபைல்போன் திருடி, பர்மா பஜாரில் மருதுபாண்டி, 43, என்பவரிடம் விற்பதும் தெரியவந்தது.பிரின்சஸ் மற்றும் மருதுபாண்டியை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 67 மொபைல்போன்கள், இரண்டு, லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.



புகையிலை விற்றவர் கைது:


புளியந்தோப்பு, காந்தி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர், அன்புரோஸ், 44. அவர், புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக, பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார், அன்புரோசை கைது செய்து, அவரிடமிருந்து, அரை கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.



போலீசாரை மிரட்டிய மூவர் கைது :


வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர், சேகர், 52; இளநீர் மொத்த வியாபாரி. அவர், மாங்காடு பகுதியில் இளநீர் விற்கும் திலகா, 32, என்பவருக்கு, இளநீர் விற்றுள்ளார். நேற்று முன்தினம் மாங்காடு சென்ற சேகர், இளநீர் விற்ற பணத்தை, திலகாவிடம் கேட்டுள்ளார். அப்போது, திலகாவின் கணவர் குமாருக்கும், சேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, மாங்காடு காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். போலீசார், சேகர் மற்றும் குமாரை, காவல் நிலையத்திற்கு அழைத்து, நேற்று விசாரித்தனர்.அப்போது, காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த சேகரின் ஆதரவாளர்கள் மூவர், 'புகார் அளித்தவரை ஏன் விசாரிக்கிறீர்கள்' எனக்கூறி, மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த, ரமேஷ், 40, பிர்லா போஸ், 27, பழனி, 23, ஆகியோரை, போலீசார் கைது

செய்தனர்.



'மாஜி' வீட்டில் கொள்ளை முயற்சி:

தி.நகர், பெரியார் சாலையைச் சேர்ந்தவர், பாலசுப்ரமணியம், 64; முன்னாள், டி.என்.பி.

எஸ்.சி., தலைவர்.நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், மின் இணைப்பை துண்டித்து, திருட முயன்றார். அப்போது, அந்த மர்ம நபரை, கையும் களவுமாக, பாலசுப்ரமணியம் பிடித்தார்.போலீசார், அவரை அழைத்துச் சென்று விசாரித்ததில், சேலம் மாவட்டம், அட்டூரைச் சேர்ந்த சீனிவாசன், 27, என்பதும், அசோக்நகர், காசி திரையரங்கம் அருகே, நடைபாதையில் வசிப்பதும் தெரியவந்தது. பாண்டிபஜார் போலீசார், சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



மொபைல் பறித்தவர் கைது

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர், ராம்குமார், 24; சென்னை, ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 16ம் தேதி இரவு, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், ராம்குமாரை கத்தியால் குத்தி, மொபைல்போனை பறித்து சென்றனர்.

பூந்தமல்லி போலீசார் விசாரித்தனர். திருவேற்காட்டை சேர்ந்த ராஜு, 21, என்பவன், ராம்குமாரை கத்தியால் குத்தி, மொபைல் போன் பறித்தது தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார், தப்பிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X