போலீஸ், விபத்து செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
05:52

பெண்ணிடம் நகை திருட்டு


கீழக்கரை : ஏர்வாடி தர்கா அருகே சடைமுனியன்வலசையை சேர்ந்தவர் தர்மர், இவரது மனைவி முருகவள்ளி,28. நேற்று முன்தினம் இரவு, காற்று வாங்க வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார்.வீட்டின் உள்ளே நுழைந்த நபர் முருகவள்ளியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை திருடி தப்பினார்.



தீ விபத்தில் பெண் பலி


திருவாடானை : திருவாடானை குஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி கவிதா,30. திருமணமாகி 6 ஆண்டுகளானது.ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மார்ச் 23ல் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் கவிதா காயமடைந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.



மாடு திருட்டு


திருவாடானை: திருவாடானை கல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி,55. இவருக்கு சொந்தமான பசுமாடு வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே சூரமடை கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி,70 அந்த மாட்டை திருடியுள்ளார். மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்ப டைத்தனர். திருவாடானை போலீசார் அந்தோணிசாமியை கைது செய்து மாட்டை கைப்பற்றினர்.



பரமக்குடியில் நகை பறிப்பு


பரமக்குடி : பரமக்குடி முத்துச்செல்லாபுரம் ராஜேந்திரன் மனைவிசெல்வராணி, 42. இவர் நேற்று டூவீலரில் பின்னால் அமர்ந்து போர்டிங்ரோடு வழியாக வீட்டிற்கு சென்றார்.அப்போது

பின் தொடர்ந்து டூவீலரில் வந்த நபர்கள் செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X