போலீஸ், விபத்து செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
06:05

பெண் தற்கொலை


காரைக்குடி : காரைக்குடி சங்கராபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகள் தேவி,27. குடும்ப தகராறு காரணமாக கடந்த ஓராண்டாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். கணவரிடம் இருந்த அவரது இளைய மகனை நினைத்து தினம் வருத்தத்தில் இருந்தவர், கடந்த 17-ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

பெற்றோர் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.


ரூ.13 லட்சம் மோசடி; தாய், மகன் மீது வழக்கு


காரைக்குடி : காரைக்குடி டி.டி.நகர் சுப்பிரமணியன்,35. ஆனந்தாநகர் 2-வது வீதி வெங்கடாச்சலம். இருவரும் நண்பர்கள். சென்னை பள்ளிக்கரணையில் இவர்களது நண்பர் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான 5.5 சென்ட் இடத்தை வெங்கடாச்சலம் மற்றும் அவரது தாயார் வள்ளியம்மை ஆகியோர் ரூ.40 லட்சத்து 29 ஆயிரத்துக்கு சுப்பிரமணியத்திடம் விற்றுள்ளனர். இடத்தின் உரிமையாளருக்கு ரூ.27 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். தன்னை ஏமாற்றி, நம்பிக்கை மோசடி செய்தது தெரிந்த சுப்பிரமணியன் இது குறித்து வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.சுப்பிரமணியன் காரைக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில், வடக்கு இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தாய், மகன் மீது வழக்கு பதிந்தார்.



ஜல்லிக்கட்டில் வாலிபர் காயம்


சிவகங்கை : படமாத்துார் மாத்துார் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 க்கும் அதிகமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த மாடுபிடி வீரர்கள் காளைகளை மடக்கி பிடித்து பரிசுகளை பெற்றனர். இதில் காளையார்கோவில் எஸ்.எஸ். நகரை சேர்ந்த மாயமுத்து மகன் ரஞ்சித் பாண்டியன்,26,க்கு ஒரு காளை கத்தியதில் வலது கை தோள்பட்டைக்கு அடியில் சதை கிழிந்தது. ரத்தம் கொட்டிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மீண்டும் திருட்டு


தேவகோட்டை : தேவகோட்டையில் மீண்டும் இரண்டு வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.

தேவகோட்டை நகைக்கடை வீதியில் வசிப்பவர் செல்வி,45. இவர் கணவருடன் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் இரண்டு வெள்ளிக்குத்துவிளக்கு காணாமல் போனது தெரியவந்தது.

திருப்புத்துார் ரோட்டில் வசிப்பவர் சீதாராமன்,65. இவர் மனைவியுடன் மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது மகன் அதே பகுதியில் வேறு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. வெளியூர் சென்றவர்கள் திரும்பி வந்த பிறகே எவ்வளவு பொருட்கள் திருடப்பட்டுள்ளது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X