தனியார் நிறுவன கருத்துகேட்பு கூட்டத்தில் கலவரம் 'மாஜி' அமைச்சர் உட்பட 28 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மே
2018
04:56

புதுச்சேரி:காலாப்பட்டில் தனியார் கம்பெனி விரிவாக்கம் பற்றிய கருத்து கேட்பு கூட்டத்தின்போது நடந்த கலவரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இரு தரப்பைச் சேர்ந்த 28 பேர் மீது, 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, பெரிய காலாப்பட்டில் இயங்கி வரும், 'ஸ்டிரைட்ஸ் ஷாசன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், தனது மருந்து உற்பத்தியை, ஆண்டுக்கு 4,800 டன் என உள்ளதை, 9,156 டன்னாக உயர்த்த திட்டமிட்டு, அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தது. மருந்து உற்பத்தி விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு, புதுச்சேரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, நேற்று முன்தினம் ஏற்பாடு செய்தது.

காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள், ஷாசன் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக, குற்றம் சாட்டி, உற்பத்தி பெருக்கத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத்தை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கூட்டத்தை கலெக்டர் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், மருந்து உற்பத்தி அதிகரிக்க ஆதரவு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்த காங்., பிரமுகர் ஜோசப் தரப்பிற்கும், எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீதும் கல்வீசி தாக்கினர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

தடியடியில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜ் கால் முறிந்தது.

மோதல் தொடர்பாக, காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், காங்., பிரமுகர் ஜோசப் உள்ளிட்ட 28 பேர் உட்பட மேலும் பலர் மீது, இந்திய தண்டனை சட்டத்தின், 8 பிரிவுகளில் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

ஐந்துக்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக கூடுதல், ஐந்துக்கும் மேற்பட்டோர் ஆயுதத்துடன் பிரச்னை உருவாக்க கூடுதல், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கூடி தாக்குதல், அரசின் தடையை மீறி நுழைதல், வழிமறித்தல், கற்களை வீசி தாக்குதல், அரசு ஊழியர் மீது தாக்குதல், தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப் பட்டுள்ளது.

இதில், அரசு ஊழியரை தாக்குதல் (332) என்ற பிரிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தாக்கி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் (333 ) என்ற பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த இரண்டு சட்ட பிரிவில் கைது செய்யப்பட்டால், உடனடியாக ஜாமின் கிடைக்காது.

கவர்னருக்கு அறிக்கை

கலவரம் தொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம், டி.ஐ.ஜி., சந்திரன், சீனியர் எஸ்.பி., அபூர்வாகுப்தா, எஸ்.பி., வெங்கடசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். பின், சம்பவம் தொடர்பாக அறிக்கை தயாரித்து, முதல்வர் மற்றும் கவர்னருக்கு அனுப்பி வைத்தனர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X