மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மே
2018
06:36

பாகூர்:நோனாங்குப்பத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், புதுச்சேரி-கடலுார் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

புதுச்சேரியில் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று அதிகாலை வருவாய்த் துறை, மணல் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அரியாங்குப்பம் வழியாக புதுச்சேரி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற மாட்டு வண்டிகளை, வருவாய்த் துறை அதிகாரிகள் மடக்கினர். அப்போது, வண்டியை ஓட்டிச்சென்ற தொழிலாளர்கள் சிலர் தப்பிச்சென்றனர். இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள், 11 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், காலை 9.30 மணியளவில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை விடுவிக்க வேண்டும். மணல் எடுக்க அனுமதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி-கடலுார் சாலை, நோனாங்குப்பத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து, போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, போக்குவரத்து சீரானது.மறியலால், புதுச்சேரி-கடலுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X