திட்ட அனுமதி கோப்புகளை பைசல் செய்ய... 30 நாள் கெடு! : வீண் தாமதத்தை தவிர்க்க சி.எம்.டி.ஏ., அதிரடி : கட்டுமான வல்லுனர்கள், பொதுமக்கள் வரவேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 மே
2018
21:43

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், திட்ட அனுமதி தொடர்பான கோப்புகளை, 30 நாட்களுக்குள் பைசல் செய்ய, அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நகர், ஊரமைப்பு சட்டப்படி, நான்கு மாடிகள் வரையிலான சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு திட்டங்களுக்கு, அனுமதி வழங்குவதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக வரும் விண்ணப்பங்களை, பரிசீலிக்கும் பொறுப்பு, பரப்பு திட்ட பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில், பரப்பு திட்ட பிரிவு அதிகாரிகள், விதிகளின்படி செயல்படாமல், விண்ணப்பங்கள் தொடர்பான கோப்புகளை, கிடப்பில் போடுகின்றனர்.

ஏராளமான கோப்புகள், ஓரிரு ஆண்டுகள் கூட, நிலுவையில் வைக்கப்படுகின்றன. கட்டுமான தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்கள், திட்ட அனுமதி கிடைக்காமல், சென்னையில் கட்டுமான தொழிலை புறக்கணித்து, பிற நகரங்களும், மாநிலங்களுக்கும், தொழிலை மாற்றின.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின், இந்த நடவடிக்கையால், சில ஆண்டுகளாக, கட்டுமான தொழில், சென்னை மற்றும் புறநகரில், பெரிதும் முடங்கியது.இந்நிலையில்,திட்ட அனுமதி தொடர்பாக வரும்கோப்புகளை,பரிசீலனைசெய்ய,காலக்கெடு நிர்ணயிக்க,வீட்டுவசதி வாரிய துறை உயர் அதிகாரிகள்முடிவுசெய்தனர். இதன்படி, 1,000 சதுரமீட்டர் வரையிலான பரப்பளவு உள்ள சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி வழங்க, பரப்பு திட்ட பிரிவின், சீனியர் பிளானர் அல்லது சீப் பிளானரே முடிவு எடுக்கலாம். அதற்கு,மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், சீனியர் அல்லது சீப் பிளானர்கள் பரிந்துரை அடிப்படையில், உறுப்பினர்

செயலர் முடிவு எடுப்பார். திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்ப கோப்புகளை, 30 நாட்களுக்குள், பரப்பு திட்ட பிரிவு அதிகாரிகள், பைசல் செய்ய வேண்டும். இந்த கெடு முடிந்த கோப்புகளை, உறுப்பினர் செயலருக்கு அனுப்ப வேண்டும். கோப்புகள் நிலவரம் குறித்து, திங்கட்கிழமை தோறும், அறிக்கை அளிக்க வேண்டும் என, வீட்டுவசதி வாரிய துறை உயர் அதிகாரிகள், சி.எம்.டி.ஏ., நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை, உடனடியாக அமல்படுத்த, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த அதிரடியால், இனி திட்ட அனுமதிக்காக வரும் கோப்புகள், மாதக்கணக்கில் தேங்கும் நிலை தவிர்க்கப்படும்.


சி.எம்.டி.ஏ., வரலாற்றில், முதல் முறையாக, திட்ட அனுமதி வழங்க, சீனியர் பிளானர்களே முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், எந்த விஷயமானாலும், உறுப்பினர் செயலரின் பெயரை பயன்படுத்தி, தப்பிக்கும் குளறுபடி அதிகாரி

களுக்கு, கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.


நகரமைப்பு வல்லுனர்கள்


வெளிப்படை வேண்டும்! : தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்க தலைவர், கே.எம். சதானந்த் கூறியதாவது: கோப்புகளை விரைந்து பைசல் செய்ய, உறுப்பினர் செயலர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, வரவேற்கத்தக்கது. இத்துடன், திட்ட அனுமதிக்காக வரும் கோப்புகள் குறித்த நிலவரத்தை, வெளிப்படையாக்க வேண்டும். கேரளா, கர்நாடகாவில் உள்ளது போல், விண்ணப்ப நிலவரத்தை மக்கள் அறிந்து கொள்ள, வகை செய்ய வேண்டும்.

இந்த உத்தரவுப்படி, சீனியர் பிளானர் நிலையிலேயே முடிவு எடுப்பது, சிறப்பாக நடக்க வேண்டும் எனில், அதற்கு கீழ் உள்ள, துணை திட்ட அதிகாரிகள், உதவி திட்ட அதிகாரிகள் நிலையில், தகுதியான வல்லுனர்களை பணியமர்த்த வேண்டும். தேவை அடிப்படையில் தனியார் நகரமைப்பு வல்லுனர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கட்டுமான துறை வளரும்! : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வின் அதிகாரத்துக்கு உட்பட்ட திட்ட அனுமதிகள் வழங்குவதில், சில நிலைகளில், தேவையற்ற தாமதம் ஏற்படுவதை குறைக்க, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத்துறையில் ஏற்படும் தேக்க நிலை தவிர்க்கப்படும். தாமதம் குறைவதால் வீடுகள் விலை உயர்வதும், கட்டுப்படுத்தப்படும். தொழில் வளர்ச்சி

ஊக்குவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.