பிளஸ் 2 தேர்வில் சென்னை மாணவ - மாணவியர்... அபாரம்! : 97 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை : கடந்த ஆண்டை விட உயர்ந்தது தேர்ச்சி சதவீதம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2018
05:52

பிளஸ் 2 தேர்வில், சென்னை மாவட்ட பள்ளிகள், 93.09 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள், 88.79 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, அதிகம் என்பதுடன், ஒட்டுமொத்தமாக, 97 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளன.

பிளஸ் 2 தேர்வில், சென்னை மாவட்டத்தில், 410 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்து, 274 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். அவர்களில், 46 ஆயிரத்து, 802 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி, 93.09 சதவீதம் ஆகும்.

14ம் இடம்

கடந்த ஆண்டு, 92.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம், 0.10 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், 94 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 4,098 பேர் தேர்வு எழுதி, 3,592 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி

சதவீதம், 87.65 ஆகும்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 14 ஆயிரத்து, 504 பேர் தேர்வு எழுதினர். அதில், 13 ஆயிரத்து, 134 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி

சதவீதம், 90.55 ஆகும்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 41 பேர், 1,180க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 679 பேர், 1,180 வரை மதிப்பெண் பெற்று உள்ளனர்.

மாவட்ட வாரியான தேர்ச்சியில், கடந்த ஆண்டு, 17ம் இடத்தில் இருந்த சென்னை மாவட்டம், இந்த ஆண்டு, 14ம் இடத்துக்கு முன்னேறி

உள்ளது.

அரசு பள்ளிகளில், விருகம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா அரசு பள்ளி, 97.51 சதவீதத்துடன் முதல் இடம்

பெற்றுள்ளது.

சூளைமேடு, ஜெய்கோபால் கரோடியா அரசு பள்ளி, 96.45 சதவீதத்துடன் இரண்டாம் இடமும், வில்லிவாக்கம் அரசு பள்ளி, 95.85 சதவீதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

மாநகராட்சி பள்ளிகள்

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 32 மேல்நிலை பள்ளிகளில், 2,199 மாணவர்கள், 3,589 மாணவியர் உட்பட, மொத்தம், 5,589 மாணவ - மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர்.

இதில், 1,782 மாணவர்கள், 3,357 மாணவியர் என, 5,139 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 88.79 சதவீதமாகும்.

கடந்தாண்டை காட்டிலும், 2.5 சதவீதம், தேர்ச்சி அதிகம். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம், 88.74 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு, இரண்டு பள்ளிகள் மட்டும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன.

இந்தாண்டு, கோயம்பேடு, சுப்பராயன், சி.ஐ.டி., நகர் ஆகிய மூன்று பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மேலும், கணக்கு பதிவியலில், 48 பேர்; வணிகவியல், 17 பேர்; வணிக கணிதம், கணினி அறிவியல், பொருளியல், கணிதம் ஆகிய பாடங்களில், தலா, ஒருவர் வீதம் என, மொத்தம், 69 மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ரூ.1 லட்சம் பரிசு

மேலும், 74 மாணவர்கள், 1,100க்கு அதிகமான மதிப்பெண்

பெற்றுள்ளனர். 326 பேர், 1,000க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று

உள்ளனர்.

மொத்தம் உள்ள, 32 பள்ளிகளில், 17 பள்ளிகள், 90 சதவீதத்திற்கு அதிகமாகவும், 12 பள்ளிகள், 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், மூன்று பள்ளிகள், 50 சதவீதத்திற்கு அதிகமாகவும், தேர்ச்சியை பதிவு செய்து உள்ளன.

நுாறு சதவீதம் தேர்ச்சி பதிவு செய்துள்ள, மூன்று பள்ளிகளின் மேம்பாட்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய், ரொக்க பரிசு வழங்கப்

பட்டு உள்ளது.


தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உதவி

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கி, அவர்களை மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும் என, மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள், மறு தேர்வில் தேர்ச்சி பெற, மாநகராட்சி சார்பில் உதவிகள் செய்யப்படும். அவர்களுக்கு, பாடத்திட்டத்தில் எழும் சந்தேகங்களுக்கும், ஆசிரியர்கள் வழியே விளக்கம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மகேஷ்வரி ரவிகுமார், துணை கமிஷனர், கல்வித்துறை, சென்னை மாநகராட்சி


மீண்டு வந்த எழும்பூர் அரசு பள்ளி!

பிளஸ் 2 தேர்வில், சென்னை அளவில், அசோக்நகர் அரசு பள்ளி, 94.83 சதவீதத்துடன், நான்காம் இடமும், எழும்பூர், அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளி, 94.29 சதவீத தேர்ச்சியுடன், ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.

முதல் ஐந்து இடம் பெற்ற பள்ளிகளில், எழும்பூர் பள்ளியை தவிர, மற்ற அனைத்தும், பெண்கள் மேல்நிலை பள்ளியாகும். எழும்பூர் பள்ளியில்,

இரு பாலின மாணவர்களும் படிக்கின்றனர்.

எழும்பூர், அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளியில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வந்தது. மேலும், பொதுத்தேர்வின் தேர்ச்சியில், பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில், சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள், மூன்றாண்டுகளுக்கு முன் நிரப்பப்பட்டன. தலைமை ஆசிரியையாக, கண்மணி

நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது, உள் கட்டமைப்பை மேம்படுத்துவது என, பலவகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கடின முயற்சியில், இந்த பள்ளி, மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்து, மாவட்ட அளவில் தேர்ச்சி பட்டியலில், ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.


- நமது நிருபர் குழு -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X