குடிநீர் தொட்டி பழுது : மக்கள் பரிதவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2018
06:05

பம்மல்: பம்மல், ராஜிவ்காந்தி நகரில், சிறு மின்விசை தொட்டிகள் பழுதாகி விட்டதால், தண்ணீர்

வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

பம்மல் நகராட்சி, 15வது வார்டில், ராஜிவ்காந்தி நகர் உள்ளது. அங்கு, மூன்று தெருக்களும், 500க்கும் அதிகமான குடியிருப்புகளும் உள்ளன. அப்பகுதி மக்களின் வசதிக்காக, ஒன்றாவது மற்றும் மூன்றாவது தெருக்களில், சிறு மின்விசை தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

தினசரி இந்த தொட்டிகளில் தண்ணீரை தேக்கி, பயன்படுத்தி வந்தனர். எந்த நேரத்தில், தண்ணீர் தேவைப்பட்டாலும், மோட்டார் போட்டு பிடித்து வந்தனர்.

பொதுமக்களுக்கு

பயனுள்ளதாக இருந்த தொட்டிகள், சமீபகாலமாக பழுதாகி கிடக்கின்றன.

இதனால், தண்ணீருக்காக

பகுதிமக்கள் பெரும்

சிரமப்படுகின்றனர்.

ஒரு குடம் தண்ணீருக்காக, பக்கத்து நகருக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு சென்றாலும், சில நேரங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை.

ராஜிவ்காந்தி நகர், குடிசை பகுதி என்பதால், அப்பகுதி மக்களால், பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத சூழலும் உள்ளது.

இது குறித்து, நகராட்சி அதிகாரிகளிடம், பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால், தண்ணீர்

தொட்டிகளை சரிசெய்ய, நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

கோடையை கருதி, உடனடியாக சீரமைத்து, மக்கள் தடையின்றி தண்ணீர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.