போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மே
2018
00:57

பூட்டை உடைத்து 10 சவரன் திருட்டு:


அபிராமபுரம், கன்னி கோவில் தெருவைச் சேர்ந்தவர், லட்சுமி, 42. நேற்று காலை, கல்பாக்கத்தில் இருந்து வீடு திரும்பினார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 10 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



மொபைல் திருடர்கள் கைது :


பட்டினப்பாக்கம், லுாப் சாலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரை விசாரித்தனர். அதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வினோத், 24, உள்ளிட்டோர் என்பதும், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 6 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.



மூவரை கத்தியால் வெட்டி வழிப்பறி;


பீஹாரைச் சேர்ந்தவர், அம்புஜ்குமார், 24; சென்னை, மதுரவாயலில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்றிரவு பணி முடித்து, வீட்டிற்கு அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் மூவர், கத்தியால் அவரது கை, காலில் வெட்டி, மொபைல் போனை பறித்து

தப்பினர். அதே போல், மதுரவாயலைச் சேர்ந்த சித்தார்த், 22, என்பவர், பல்லவன் நகர் பிரதான சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், சித்தார்த்தின் தலையில் வெட்டி, மொபைல் போனை பறித்தனர். அதே பகுதியில் மேலும் ஒருவரை வெட்டிய மர்மநபர்கள், அவரது மொபைல் போனையும் பறித்து தப்பினர்.காயமடைந்த மூவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரவாயல் போலீசார், சேகர், 25, மணிவண்ணன், 26, சங்கர், 24, ஆகியோரை கைது செய்து, 3 மொபைல் போன்கள், 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



9 திருட்டு வாகனங்கள் பறிமுதல்:


வேளச்சேரி பகுதியில் நேற்று, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை, போலீசார் விசாரித்தனர். அதில், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மதன், 28, உள்ளிட்டோர் என்பதும், திருட்டில் ஈடுபட்டதும்

தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 5 டாடா மேஜிக், 2 டெம்போ டிராவலர், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும், 7 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



வாலிபரை தாக்கிய இருவர் கைது:


திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில், நேற்று காலை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 21, சுசிந்தரன், 26, ஆகியோர், நண்பர்களுடன் விளையாடினர். அப்போது ஏற்பட்ட தகராறில், கார்த்திக் மற்றும் சுசிந்தரனும் சேர்ந்து, ரஞ்ஜித், 21, என்பவரை, கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். திரு.வி.க.நகர் போலீசார், கார்த்திக், சுசிந்தரனை கைது செய்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X