தாம்பரத்தில் அனைத்து பிரதான சாலைகளிலும்... 'டிராபிக் ஜாம்!'  நகர திட்டமிடலில் நகராட்சி அதிகாரிகள் பூஜ்யம்  மூச்சு முட்டும் நெரிசலில் சிக்கி மக்கள் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2018
01:31

தாம்பரம் நகரில் முறையான வாகன நிறுத்தம் எதுவும் இல்லாததால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அல்லல்படும் நிலை ஏற்படுகிறது.


நகரின் அனைத்து சாலைகளிலும், கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திணறி வருகின்றனர்.தாம்பரத்தில், ரயில் நிலையம் தவிர, நகரின் எந்த ஒரு பகுதியிலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனி இடமோ, நிறுத்தமோ கிடையாது.நகரின் பிரதான சாலைகளில், வாகன போக்குவரத்து எந்த நேரமும் அதிகமாகவே இருக்கும். இந்த சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகிய இடங்களுக்கு வருவோர், தங்கள் வாகனங்களை நிறுத்த, தனி வாகன நிறுத்தங்கள் கிடையாது.



சாலையோரத்தில், வாகனங்களை நிறுத்தி விட்டு, தங்கள் பணிகளுக்கு சென்று வரும் நிலையே இருந்து வருகிறது. அதனால், நகரில் எப்போதும் கூட்ட நெரிசல், வாகன நெரிசல் என, மூச்சு விட முடியாத அளவில் இருக்கும்.



சண்முகம் சாலை





மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள மார்க்கெட் பகுதி, சுற்றுப்பகுதிகளில் மிகவும்

பிரபலமானது.நகரின் பிரதான சாலையான, சண்முகம் சாலை வழியாக, வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர், மார்க்கெட் பகுதிக்கு வரும் சரக்கு வாகனங்கள் என, சாலை எப்போதும் பயங்கர பரபரப்புடனே காணப்படும்.



சிறு கடைகள், பெரிய கடைகள் என வித்தியாசமின்றி, ஆக்கிரமிப்புகளால் இந்த மார்க்கெட் சாலையில் எப்போதும், இட நெருக்கடி இருந்து வருகிறது.முறையற்ற போக்குவரத்து, வாகன நிறுத்தம் இல்லாதது, நகர திட்டமிடல் இல்லாத தாம்பரம் நகராட்சி நிர்வாகம், கடைக்காரர்களின் அலட்சியம் என, சாலையின் கூட்ட நெரிசலுக்கான காரணங்களின் பட்டியல், நீண்டு கொண்டே செல்கிறது.



திணறல்





ராஜாஜி, காந்தி, கக்கன், முடிச்சூர் ஆகிய நான்கு பிரதான சாலைகளை இணைக்கும் உட்புற சாலைகள், தாம்பரம் நகரில் ஏராளமாக உள்ளன.திரையரங்கங்கள், உணவகங்கள், பிரபல வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், கோவில்கள் என, ஏராளமான பொதுமக்கள் கூடும் இடங்கள், இந்த உட்புற சாலைகளில் உள்ளன.



இந்த சாலைகளுக்கு வருவோரும், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தும் நிலை இருந்து வருகிறது. அதனால் இந்த சாலைகளிலும் நெரிசல், இட நெருக்கடி என, பிரச்னைகள் ஏராளமாக உள்ளன.



வெற்று கோஷம்





தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு என, குறிப்பிட்ட இடம் இல்லை. ஜி.எஸ்.டி., சாலையின் ஓரத்தில், ரயில் நிலையம் எதிரில் தொடங்கி, காந்தி சாலை வரை சாலையோரத்தில் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.நகரில், வாகனங்களை நிறுத்துவதற்கு என, அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என, நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு, திட்டம் முடங்கியது.



வாகன நிறுத்தங்கள் எதுவும் இல்லாததால், கிடைக்கும் இடங்களில் எல்லாம், வாகனங்கள் நிறுத்தவதை தவிர, பொதுமக்களுக்கு வேறு வழி இல்லை.தாம்பரத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது, சுற்றுப்பகுதிகளுடன் தாம்பரத்தை இணைத்து, தனி மாநகராட்சியாக ஆக்குவது உள்ளிட்ட திட்டங்கள், வாய் ஜாலங்களாகவும், வெற்று கோஷங்களாகவும் இருந்து

வருகின்றன.



தாம்பரம் மேம்பாலத்தின் கீழ், முடிச்சூர் செல்லும் பாதையில் அணுகுசாலையை ஆக்கிரமித்து, அனுமதியின்றி தனியார் வாகன நிறுத்தம் ஏற்படுத்தி உள்ளனர்.அந்த இடத்தை மீட்டு, வாகன நிறுத்தம் அளிக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.



உதவி செய்யலாம்





அதே போல, ரயில் நிலையம் அருகே உள்ள, மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளையும், வாகன நிறுத்தங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அளித்து உதவி செய்யலாம்.தாம்பரம் நகராட்சி நிர்வாகம், இதே போல பயன்பாடின்றி மற்றும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ள இடங்களை ஆய்வு செய்து, நெடுஞ்சாலைத்துறையிடம் பட்டியல் அளித்து, அந்த இடங்களில், வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்காக கேட்டு பெறலாம்.



நெடுஞ்சாலைத்துறையினருக்கும், இதன் மூலம் வருமானம் கிடைக்கும்; பொதுமக்களுக்கும் நெரிசல், கூட்டமின்றி நிம்மதியாக நடக்க, வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்படும்.



தீர்வுகள் என்ன?





* பிரதான பகுதிகளில், வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்த வேண்டும்



* பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களுக்கு உரிமம் வழங்கும் போது, வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே, உரிமம் வழங்க வேண்டும்



* விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, கடும் நடவடிக்கை எடுப்பது, போக்குவரத்து போலீசாரை அதிக அளவில் பணியமர்த்தி, நகரை, 24 மணி நேரமும் கண்காணிப்பது ஆகியவற்றை போலீசார் முறையாக செய்ய வேண்டும்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil murugan - Madurai,இந்தியா
08-ஜூன்-201813:28:15 IST Report Abuse
Senthil murugan தாம்பரம் மக்கள் செய்த தவறினால் விளைந்தது இந்த கேடு. இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளரகல் ஊழல பல செய்தாலும் கொஞ்சமாவது நல்லது நடந்தது...தாம்பரம் நகராட்சி நல்ல முன்னேற்றம் அடைந்தது. இப்போது உள்ள எம் எல் ஏ என்ன செய்கிறார் கென்றே யாருக்கும் தெரியாது.....
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
08-ஜூன்-201813:19:33 IST Report Abuse
christ பல்லாவரம் ,குரோம்பேட் , தாம்பரத்தில் GST சாலையில் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீஸ் இங்கு ஆம்னி பஸ்களில் பணத்தை வாங்கி கொண்டு கண்டும் காணாமலும் உள்ளனர் . GST சாலையில் பல லட்சங்கள் செலவில் சுரங்கப்பாதை அமைத்தும் அதன் அருகிலே சாலையை கடக்க சிக்னல் அமைத்து பாதசாரிகளை சாலைகளை கடக்க விடுகின்றனர் .இதனால் சாலைகளில் போக்குவரத்து கடும் நெருக்கடியை சந்திக்கிறது . மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ,தாம்பரம் போலீஸ் சாலைகளில் இருக்கும் கடைகளில் கையூட்டு பெற்று கொண்டு கண்டும் காணாமலும் உள்ளனர் .இதுவே தாம்பரம் நெரிசலுக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-201804:18:16 IST Report Abuse
J.V. Iyer எழுபது வருட களப்பிரர்கள் ஆட்சியின் பிரதிபலிப்பு இவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். பணம் வாங்கி வோட்டு போட்டால் இப்படித்தான். வோட்டு இருந்தும், போடாமல் இருந்தால் இப்படித்தான். களப்பிரர்கள் ஆட்சியில் தமிழம் ஒரு இருளகமாக உள்ளது. இப்போதாவது விழித்துக்கொண்டால் விடிவு வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X