துப்புரவு ஊழியர்கள் பற்றாக்குறை சுகாதார பாதிப்பில் ஊராட்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
01:28

சென்னை:மாநகராட்சியை ஒட்டி உள்ள, 5 ஊராட்சிகளில், துப்புரவு ஊழியர்கள் பற்றாக்குறையால், சுகாதார பாதிப்பு அதிகரித்து உள்ளது.

சென்னை மாநகராட்சியை ஒட்டி, மூவரசம்பட்டு, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, வேளச்சேரி- - தாம்பரம், மேடவாக்கம்- - சித்தாலப்பாக்கம் மற்றும் பரங்கிமலை - -மேடவாக்கம் பிரதான சாலையை ஒட்டி, இந்த ஊராட்சிகள் உள்ளன.

இந்த பகுதிகளில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக, மேடவாக்கம் ஊராட்சியில், வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில்,

ஜல்லடையான்பேட்டை முதல் சந்தோஷபுரம் வரை, 3 கி.மீ., துாரத்தில், 400க்கும் மேற்பட்ட

கடைகள் உள்ளன.

அதேபோல், அனைத்து ஊராட்சியிலும், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தினசரி, 3 முதல், 15 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால், போதிய ஊழியர்கள்

இல்லாததால், குப்பை சேகரிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு ஊராட்சியில், துப்புரவு பணிக்கு, 17 முதல், 24 வரை ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், பாதி பேர் தினக்கூலி ஊழியர்கள். இந்த ஊழியர்கள், 15 ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டவர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊராட்சி பகுதிகள் அபார வளர்ச்சி அடைந்துள்ளன. அதற்கு ஏற்ப, ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தெருக்களில் குப்பை தேங்கி, சுகாதாரம் பாதிக்கிறது.

குடியிருப்புகள் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், துப்புரவு பணிக்கு போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


துப்புரவு ஊழியர்களில், தினசரி, 5 பேராவது, பல்வேறு காரணங்களால் விடுப்பு எடுப்பர். பரப்பளவு அதிகமான பகுதியானதால், இருக்கிற ஊழியர்களால், முழுமையாக குப்பை சேகரிக்க முடியவில்லை. சில இடங்களில், இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் செல்ல முடிகிறது. ஊழியர்கள், வாகனங்கள் பற்றாக்குறை குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, இரண்டு ஆண்டுகள் ஆகிறது. நடவடிக்கை தான் இல்லை.


ஊராட்சி அதிகாரிகள்




 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X