அகலமில்லாத தரைப்பாலத்தால் அபாய பகுதியாக மாறும் கைவேலி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
01:28

சென்னை:வேளச்சேரி - -தாம்பரம், 150 அடி அகல சாலையில், கைவேலி பகுதியில் உள்ள தரைப்பாலம் விரிவுபடுத்தப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

வேளச்சேரி- - தாம்பரம் சாலை, 14.08 கி.மீ., துாரம் கொண்டது. முன்பு, 70 அடி அகலமாக இருந்த சாலை, 150 அடி அகலமாக மாற்றப்பட்டு வருகிறது.

மேடவாக்கம் சந்திப்பில், 3 கி.மீ., துாரத்தில், மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேலும் முக்கிய பகுதிகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை மேம்பாலம் வரை, இரண்டு ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. கைவேலி பகுதியில், சாலையின் குறுக்கே ஒரு தரைப்பாலம் உள்ளது.

மடிப்பாக்கம், மயிலை பாலாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் மழைநீர், இந்த தரைப்பாலம் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.

சாலை விரிவாக்கத்தின் போது, இந்த பாலத்தை விரிவுபடுத்தவில்லை. 150 அடி அகல

சாலையில், பாலம் அமைந்துள்ள பகுதி மட்டும், 90 அடி அகலத்தில் உள்ளது.

இதனால் அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயத்தில் பயணிக்கின்றன.

இரவு நேரத்தில், கவனக்குறைவாக செல்லும் வாகனங்கள், பாலத்தின் மீது மோதுகிறது.

அபாய பகுதி என்பதை உணர்ந்து, சாலையின் அகலத்தை கணக்கிட்டு, தரைப்பாலத்தை விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.