சிறப்பு ரோந்து படை உருவாக்கம் 2 'ஷிப்ட்'டில் இரவு முழுவதும், 'வேட்டை!'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
06:49

தலைநகர் சென்னையில், செயின் மற்றும் மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், குற்றத்தடுப்பு சிறப்பு ரோந்து படை உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில், இரு தினங்களுக்கு முன், ஒரே நாள் இரவில், மர்ம நபர்கள், அடையாறில் துவங்கி கொளத்துார் வரை, 14 இடங்களில், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.

மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த, விக்னேஷ் என்ற, ஐ.டி., ஊழியரை, தலையில் அரிவாளால் வெட்டி, அட்டூழியம் செய்தனர்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், புதிதாக குற்றத்தடுப்பு சிறப்பு ரோந்து படையை உருவாக்கி, உத்தரவிட்டுள்ளார்.


சென்னையில் உள்ள, நான்கு மண்டல வாரியாக, துணை கமிஷனர்கள் தலைமையில், சிறப்பு ரோந்து படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படையில், கூடுதல் துணை கமிஷனர்கள், இருவர்; இரண்டு, இன்ஸ்பெக்டர்கள்; எஸ்.ஐ.,க்கள், ஆறு பேர்; காவல் நிலையங்களில் பணிபுரியும், தலைமை காவலர், போலீசார் என, 12 பேர்; ஆயுதப்படை போலீசார், ஆறு பேர் என, மொத்தம், 28 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு, ரோந்து வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்கள், இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, ஒரு 'ஷிப்ட்' ஆகவும்; அதிகாலை, 4:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை, ஒரு 'ஷிப்ட்' ஆகவும், வரும், 30ம் தேதி வரை, ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

வாகன சோதனை, செயின் மற்றும் மொபைல் பறிப்பு சம்பவங்களை தடுத்தல், பைக் ரேஸ் நபர்களை பிடித்தல், 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை பிடித்தல், குற்றவாளிகளின் வீடுகளை கண்காணித்தல் போன்ற பணிகளை, அவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே, கூடுதல் கமிஷனர்கள், இணை, துணை, உதவி கமிஷனர்கள் தலைமையில், பகல் மற்றும் இரவு ரோந்து பணிகள், வழக்கம்போல் நடக்கும்.

'தற்போது உருவாக்கப்பட்டுள்ள, சிறப்பு படையினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வர். இப்பணிகளை, இணை கமிஷனர்களும் கண்காணிப்பர்' என்றனர்.



- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X