முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினம் 500 பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
06:59

அண்ணாநகர்:முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, 'முதியோரை மதிப்போம்' என, 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஐ.நா., சபை, 2006ம் ஆண்டிலிருந்து, ஜூன், 15ம் தேதியை, முதியோர் வன்கொடுமை ஒழிப்பு நாளாக, அனுசரித்து வருகிறது.


இதையடுத்து, வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை சார்பில் நேற்று, அண்ணா நகர், எஸ்.பி.ஓ,ஏ., பள்ளியில், மாணவ - மாணவியருக்கு, 'முதியோரை மதிப்போம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளையின் நிறுவனர், டாக்டர்.வி.எஸ். நடராஜன் பேசியதாவது:


முதியோர், மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மொபைல்போனில் நேரத்தை செலவிடும் இளைஞர்களோ, முதியோரை தனிமையில் தவிக்க விடுகின்றனர்.

உண்மையான அன்பும், பாசமும் தான்,

முதியோரின் எதிர்பார்ப்பு. அதைக் கொடுப்பது, இளைஞர்களின் கடமை.

முதியோரை மதித்தல் குறித்த கருத்துகள், பள்ளி பாட நுாலில் இடம்பெற வேண்டும்.

பள்ளியில், மாதம் ஒருமுறை, 'முதியோரை மதிப்போம்' என, மாணவர்கள் உறுதிமொழி ஏற்க, தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


சமூக நலத்துறை ஆணையர், வி.அமுதவல்லி பேசுகையில், 'தேசிய முதியோர் தினம் எப்போது, முதியோரின் தேவை என்ன' போன்ற பல கேள்விகள் கேட்டு, சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.தொடர்ந்து, முதியோர் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. மேலும், 'முதியோரை மதிப்போம்' புத்தக வெளியீடு நடந்தது. இதையடுத்து, மாணவ - மாணவியர் உறுதிமொழி எடுத்தனர்.


பள்ளி முதல்வர், ராதிகா உன்னி, சமூக நலத்துறை துணை இயக்குனர் ரேவதி, 'புதிய உறவு' மாத இதழ் ஆசிரியர், எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட, 500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.