போதையில் ரகளை சட்ட மாணவர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
07:03

சிட்லபாக்கம்:மது போதையில், ரகளையில் ஈடுபட்ட சட்ட மாணவரை, போலீசார் கைது செய்தனர்.

குரோம்பேட்டை, நேரு நகர், ராஜேந்திர பிரசாத் சாலையை சேர்ந்த, நடராஜன் மகன், கார்த்திக், 24; பல்லாவரம் தனியார் பல்கலையில், இரண்டாம் ஆண்டு, பி.ஏ., சட்டம் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, எம்.ஐ.டி., மேம்பாலம் அருகில், சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் ரமேஷ், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்திக், போலீசார் தடுத்தும், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். சிறிது துாரம் சென்று, வாகனத்தை நிறுத்திய கார்த்திக், போலீசார் நின்ற பகுதிக்கு சென்று, தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மது போதையில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, போலீசார், அவரை கைது செய்தனர். தாம்பரம் நீதிமன்றத்தில், கார்த்திக் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார்.


50 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

எர்ணாவூர், ஜூன் 14--

எர்ணாவூர், பாரதியார் நகரில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், ஒரு வீட்டை சோதனை செய்ததில், 5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இளங்கோ, 38, அவரது மனைவி கவிதா, 35; முத்து, 27, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.அவர்கள் அளித்த தகவலின்படி, சுனாமி குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து, 2 புதிய ஆட்டோ மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.