போலீஸ் டைரி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
07:07

குண்டு வீசிய இருவர் கைது


ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர், சுந்தர், 28; விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.கடந்த, 10ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சுந்தர் வீட்டில், இரண்டு மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தப்பினர். கோயம்பேடு போலீசார், நெற்குன்றத்தைச் சேர்ந்த, வினோத்குமார், 21, கார்த்தி, 24, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு வலை

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கேளம்பாக்கம் அடுத்த படூரில், பெற்றோருடன் வசித்த இந்த சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் மங்கள் ராஜ், 30, என்பவர் பழகி வந்துள்ளார்.

கடந்த, 5ம் தேதி, அயப்பாக்கம் வந்த மங்கள்ராஜ், ஆசை வார்த்தை கூறி, அவனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 10ம் தேதி, சிறுமியை அவரது வீட்டில் விட்ட மங்கள்ராஜ், தப்பிச் சென்றான்.சிறுமிக்கு நடந்த கொடுமையை அறிந்த

பெற்றோர், நேற்று முன்தினம் மாலை, போலீசில் புகார் அளித்தனர். ஆவடி மகளிர் போலீசார்

விசாரிக்கின்றனர்.


முதியவரிடம் மொபைல் பறித்தவர் கைது


கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பக்தவத்சலம், 50. அவர், டி.பி.சத்திரம் மண்டபம் தெருவில், நேற்று நடந்து சென்றார். அப்போது வந்த மூவர், பக்தவத்சலத்தை தாக்கி, மொபைல் போனை பறித்து தப்ப முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதிமக்கள் ஒருவனை மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அண்ணா நகரைச் சேர்ந்த சாமுவேல் என்பவனை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.


டீசல் திருடியவன் கைது


விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த, சினிமா படப்பிடிப்பு வாகனங்களில், மூன்று பேர், டீசல் திருடிக் கொண்டிருந்தனர். போலீசார், பெருமாள், 37, என்பவனை மடக்கி பிடித்தனர். அவனிடமிருந்து, டீசல் திருடி விற்ற, 3,600 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


குடோனில் தீ விபத்து


ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஸ், 45. இவர், அதே பகுதியில் உள்ள பாலாஜி நகரில் உள்ள குடோனில், மரம், பிளாஸ்டிக் பொருட்கள் அடுக்கி வைத்திருந்தார். நேற்று, குடோன் திடீரென தீ பிடித்தது.கிண்டி தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


மொபைல் போன் பறிப்பு


கொண்டித்தோப்பைச் சேர்ந்தவர், மகாவீர் குமார், 41. இவர் நேற்று, தன் வீட்டருகே நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவரது மொபைல் போனை பறித்து, தப்பினர். ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.


பெண்ணிடம் மொபைல் பறிப்பு


மயிலாப்பூரைச் சேர்ந்தவர், ராஜலட்சுமி. அவர் நேற்று காலை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், ராஜலட்சுமியின் மொபைல் போனை பறித்து, தப்பினர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


கஞ்சா வியாபாரி கைது


வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்தவர், பிரவீன்குமார், 21. இவர், வேப்பேரி அஸ்டபுஜன் சாலை, ரங்கய்யா தெரு சந்திப்பில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். நேற்று, இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


ரயில் பயணியிடம் செயின் பறிப்பு


அம்பத்துாரை சேர்ந்தவர், ஆலயமணி, 28; தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கோடம்பாக்கத்தில் இருந்து, ஊரப்பாக்கத்திற்கு, மின்சார ரயிலில் சென்றார்.ஊரப்பாக்கம் நிலையத்தில் இறங்கி, பிளாட்பாரத்தில் நடந்தபோது, இருட்டான பகுதியில் நின்றிருந்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து, 1 சவரன் செயின் மற்றும் மொபைல்போனை பறித்து தப்பினர்.தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.