| சிட்டி கிரைம் செய்திகள் Dinamalar
சிட்டி கிரைம் செய்திகள்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2018
01:10

26 மொபைல் போன் திருட்டு

சுந்தராபுரம், பொள்ளாச்சி ரோட்டில்மொபைல் போன் கடை நடத்தி வருபவர் நாகித், 48; இரவில் கடையை பூட்டி விட்டு சென்றவர், இரண்டு நாட்கள் கழித்து வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த, 26 மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. அதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். போத்தனுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்ற 6 பேர் கைது

கோவை நகரில் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பவர்களை பிடிக்க, உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு, சரவணம்பட்டி பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, லாட்டரி விற்றுக்கொண்டிருந்த கரும்புக்கடை சம்சுதீன், 47, செல்வபுரம் ஹமீது, 64, கவுண்டம்பாளையம் ஈஸ்வரன், 53, தென்னம்பாளையம் துரைராஜ், 44, காந்திபுரம் ரவீந்திரன், 53, காரமடை ரங்கநாதன், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பிளாக்கில் மது விற்பனை

டாஸ்மாக்கில் மது வாங்கி, அவற்றை அதிக விலைக்கு விற்பவர்களை பிடிக்க மது விலக்கு மற்றும் மாநகர போலீசார் நேற்று முன்தினம் இரவில் சோதனை நடத்தினர். அப்போது, பிளாக்கில் மது விற்ற ராமநாதன், 56, மகாலிங்கம், 33, அந்தோணி, 37, ஸ்டீபன்ரான், 25, மூர்த்தி, 28, பாபு, 30, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 65 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X