மவுலிவாக்கம் கட்டட விபத்தில் அதிகாரிகள்... 'எஸ்கேப்!' கிடப்பில் போடப்பட்டது விசாரணை அறிக்கை  விதிமீறல்களுக்கு சி.எம்.டி.ஏ.,வில் பஞ்சமில்லை
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
05:51

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து நடந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், இது தொடர்பான, நீதிபதி ரகுபதி விசாரணை குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மவுலிவாக்கம் கட்டட விவகாரத்தில் நடந்த விதிமீறல்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தற்போதும் செய்து வருவது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், தனியாரால் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம்,

2014 ஜூன், 28ல் இடிந்து விழுந்ததில், 61 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


ஆனால், இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியதிலேயே, விதிகளை தளர்த்தி, அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக, செய்தி வெளியான பின், இது குறித்து விசாரிக்க, நீதிபதி ரகுபதியை, தமிழக அரசு நியமித்தது.நீதிபதி ரகுபதி விசாரணை குழு, தனது அறிக்கையை, அதே ஆண்டு ஆக., 23ல் அரசுக்கு அளித்தது.


பரிந்துரைகள் விபரம்:

l கட்டுமான நிறுவனங்களுக்கும், திட்டஅனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான, மறைமுக தொடர்பு குறித்து கண்காணிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

l மவுலிவாக்கம் திட்டத்துக்கு அனுமதி வழங்கியதில், அதிகாரிகளின் குறைபாடு குறித்து, துறை ரீதியாக விசாரிக்க வேண்டும்l சிறப்பு புலனாய்வுக்குழு, தொழில்நுட்ப குழு பரிந்துரைகள் அடிப்படையில், கட்டட அனுமதி விதிகளில், திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டன.


இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

நீதிபதி ரகுபதி கமிட்டி வழங்கிய இந்த பரிந்துரைகளை, தமிழக அரசு ஏற்றது. ஆனால், இதை செயல்படுத்த, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடுக்குமாடி திட்ட அனுமதிக்கு பரிந்துரைக்கும் குழுவில், சில மாறுதல்கள் செய்யப்பட்டன.

ஆனால், கட்டட அனுமதியில் தவறு செய்த, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-201816:41:40 IST Report Abuse
Selvakumar Krishna இந்த அடிமை அரசு, லஞ்சம் வாங்கி உயிர்பலிக்கு காரணமான அந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-201814:39:57 IST Report Abuse
ஆரூர் ரங் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் .எரிந்து நாசமாகி பல நாட்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல்செய்த சென்னை சில்ஸ்க்கு மீண்டும் எட்டுமாடி புதுக்கட்டிடம் அங்கேயே கட்டிக்கொள்ள அனுமதித்துள்ளார்கள் .இன்னும் அதே திநகரில் சுமார் பல நூறு ஆபத்தான வணிகள் கட்டிடங்களும் அதனைவிட பத்துமடங்கு பாரிமுனைப்பகுதியிலும் அரசு ஆதரவுடன் மக்களைக் கொல்லத்தயாராக இருக்கின்றனவே . ஆனாலும் டுமீளர் ஒட்டு ஊழல் திராவிஷர்களுக்கே
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜூன்-201810:50:02 IST Report Abuse
Bhaskaran தற்போது அதைவிடஉயரமான கட்டிடங்கள் நகரின் நடுவே கட்டுகின்றனர் சென்னை நிலநடுக்க பாதிப்பு உள்ளாகும் பகுதியில் உள்ளது அப்படி irukavum பெரும் தொகைகளை கையூட்டு வாங்கிக்கொண்டு பெரிய மட்டத்தில் கட்டிடங்களுக்கு அனுமதித்தருகின்றனர் இது வருந்த தக்க செயலாகும்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-201810:14:35 IST Report Abuse
Swaminathan Nath கொடுமை . 61 நபரை பலி வாங்கிய வழக்கு, இன்னும் தீர்ப்பு வர வில்லை, யார் தவறு, ????அரசாங்கம் ஏன் மெத்தனம் செய்கிறது, அங்கு வீடு வாங்கியவர்கள் நிலை என்ன???? அரசியல் சார்புள்ள ஒருவர் இறந்தால் எல்லோரும் கொதித்து எழுவார்கள், அப்பாவி இறந்தால்இங்கு விலை இல்லை, நம் அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் பார்த்து தான் போராட்டம் நடத்துகின்றன, ஒரு அனிதாவிற்காக கொதித்து எழுந்தவர்கள், 13 பேர் இறந்த தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்காக கோப பட்டவர்கள், 61 அப்பாவி தொழிலார்கள் இறந்த போது ஏன் போராட வில்லை, சிந்திக்கவும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.